14109 ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேக மலர்.

யாழ்ப்பாணம்: தர்மபரிபாலன சபை, ஆத்தியடிப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, ஜனவரி 1983. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், 17 B, ஜும்மா பள்ளிவாசல் ஒழுங்கை). 64 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ. 26.01.1983 அன்று இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வினையொட்டி வெளியிடப்பெற்றுள்ள இம்மலரில் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன், ஆலயப் பெருமை (சு.சிதம்பரப்பிள்ளை), ஆத்தியடி விநாயகக்கடவுள் பதிகம், விநாயகக் கடவுள் பன்னீரவதாரப் பதிகம் (கோ.கணபதிப்பிள்ளை), ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் வரலாறு (ஆ.குமாரசாமி, ஆ.சிவபாதசுந்தரம்), ஆத்தியடிச் சுப்பிரமணியர்மேற் பதிகம் (கோ.கணபதிப்பிள்ளை), சனீஸ்வரன் (சோ.சிவசக்தி), ஊஞ்சல், வினை தீர்க்கும் நாயகன் (இ.கிருஷ்ணதாஸ்), விநாயக வழிபாடு (ச.சிவசுப்பிரமணியம்), விநாயகர் ஆலயமும் கும்பாபிஷேகமும் (சந்திரா தியாகராஜா), இளைஞர் கல்வி தேர்ச்சிக் சங்கமும் கோவிலும் (க.இராம்குமார்), ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் வருடாந்த நிகழ்ச்சி நிரலும், உபயகாரர்களும், செல்வ விநாயகன் எங்கள் ஆத்தியடியான் (சிவஸ்ரீ லோகசகாயன்), ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபை 1982 – 1983ம் ஆண்டு நிர்வாக சபை, குடமுழுக்கும் கிரியா விளக்கமும் (வ.வே.நவரத்தினக் குருக்கள்), திருக்குடமுழுக்குக் கிரியாகால நிகழ்ச்சிகள், மகா கும்பாபிஷேகத்தில் பங்கு கொள்ளும் குருமணிகள் (க.சண்முகநாதன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39868).

ஏனைய பதிவுகள்

12357 – இளங்கதிர்: 28ஆவது ஆண்டு மலர் 1993-1994.

எம்.ஏ.முஹம்மது றமீஸ் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம்,1வது பதிப்பு, 1994. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தனஅவென்யூ, தெகிவளை). (20), 121 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25*19 சமீ. தலைமைத்துவமும்