மலர்க் குழு. இணுவில்: ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, மே 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B , புளுமெண்டால் வீதி). (30), 192 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ. 9.5.2004 அன்று நடந்த மணிமண்டபத் திறப்பு விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலரில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் பிள்ளையார் சுழி (தமிழண்ணல்), மகா கணபதி மூலமந்திரம் (மு.சுந்தரலிங்க தேசிகர்), பிரணவ சொரூபி (வை.அநவரதவிநாயக மூர்த்தி), ஓங்காரத் திருவுரு (தங்கேஸ்வரியம்மா தங்கராசா), உள்சுற்றுப் பிரகாரச் சுவரில் காணப்படும் ஓவியங்கள், உற்சவ மூர்த்திகள் உலா வரும் ஊர்திகள், விநாயகர் தத்துவம் (பாபாவின் விளக்கம்), பிள்ளையாரின் தொல்வடிவங்கள் (மு.நளினி, இரா.கலைக்கோவன்), காணாபத்தியம் (ஆர்.வடிவேல்), ஆனைமுகனும் அறுகம்புல் வழிபாடும் (சபா ஜெயராசா), குட்டிக் கொள்ளல் (திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்), தோப்புக்கரணம் (பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள்), விநாயகர் விரதங்கள் (எஸ்ஸாரெம்), அறுகும் வன்னியும் (மாணிக்க விநாயகம்), மறுபிறவித் தத்துவம், பிள்ளையார் பெருமை (சுகி.சிவம்), தேவாரங்களில் விநாயகர் (தெய்வத்தின் குரல்), இலக்கியத்தில் விநாயகர் (செ.திருநாவுக்கரசு), ஸ்ரீ வித்யா கணபதி (மாணிக்க விநாயகம்), திருமுறை தந்த விநாயகர் (சுப. திண்ணப்பன்), பிள்ளையார் யார்? (க.வி.விக்னேஸ்வரன்), கலசத் தத்துவம், விநாயகர் பரத்துவம் (சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்), விநாயகர் பெருமை (தங்கம்மா அப்பாக்குட்டி), பிரம்ம முகூர்த்தம், பிள்ளையார் கருவிகள் (ஸ்ரீ கிருஷ்ணானந்த சர்மா), இருமுறை இறை வணக்கம், பரராஜசேகர மன்னனுக்கும் ஆலயத்துக்கும் உள்ள தொடர்பு (கி.வா.ஜகந்நாதன்), கணபதி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் (மு.நளினி, இரா.கலைக்கோவன்), கொழுக்கட்டை, ஈழநாடும் விநாயகர் வழிபாடும் (ஆறு திருமுருகன்), அயல் நாடுகளில் ஆனைமுகத்தோன் வழிபாடு (ஆர்.பி.வி.எஸ். மணியன்), Ganesa in southeast asian art (T.K.sapapathy),Early sculptures,(M.Nalliny and S.Kalaikkovan)அகத்திய முனிவர் அருளிச் செய்த பிள்ளையார் கதை, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், விநாயகரின் 32 தோற்றங்கள், விநாயகர் புராணம், பஞ்சமுக விநாயகரே ஆடிரூஞ்சல் (மூதறிஞர்.வை.அ.கதிர்காமநாதன்), இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் மீது பாடப்பெற்ற அருட்பாடல்கள், இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் புகழ்மாலை (பொன்.அம்பிகைபாக உபாத்தியாயர்), ஸ்ரீ பரராஜ்சேகரப் பிள்ளையார் திருஅந்தாதிக் கீர்த்தனைகள், இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கீர்த்தனைகள், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை (இணுவை சுசீலா) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33063).
Miami Beach Erreichbar Spielautomat Erfahre viel noch mehr damit!
Content CASINOS within unter anderem um DELRAY BEACH, FLORIDA – 2024 Aktuelle Liste | Mr BET 100 Casino -freie Spins Play Miami Beach Slot For