14116 கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை கொழும்பு: அரைநூற்றாண்டு நிறைவு 1925- 1975: பொன்விழா மலர்.

கு.குருசுவாமி, ச.த.சின்னத்துரை (பத்திராதிபர் குழு). கொழும்பு: கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, 2வது பதிப்பு, ஜுன் 1976, 1வது பதிப்பு, மார்ச் 1976. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம்). (50) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. 21.3.1976 அன்று மருதானை கப்பித்தாவத்தை செல்வவிநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தேறிய பொன்விழாவின்போது வெளியிடப்பெற்ற மலரின் மீள்பதிப்பு இதுவாகும். வாழ்த்துரை, ஆசியுரைகள் என்பவற்றுடன் ஐம்பது ஆண்டுகள் அரும்பணி ஆற்றிவரும் கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை (தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை), கதிர்காம மூர்த்தி, கப்பித்தாவத்தை ஸ்ரீ விநாயகர் கோவிலின் சுவையான வரலாறு (செல்லப்பா நடராசா), கதிர்காம முருகன் (தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை) ஆகிய முக்கிய ஆக்கங்களும் தொண்டர் சபையின் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் குறிப்புரையுடன் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4579).

ஏனைய பதிவுகள்

14370 கலசம் 2009. இதழாசிரியர் குழு.

கொழும்பு: சாந்த கிளேயார் கல்லூரி, இந்து மாணவர் மன்றம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை). 155 பக்கம், புகைப்படங்கள், விலை:குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.