14117 கருநாகபூஷணம்: வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலய புனராவர்த்தன பிரதிஷடா நவகுண்டபஷ மஹாகும்பாபிஷேகம்.


தளையசிங்கம் இரவீந்திரன் (மலராசிரியர்). வவுனியா: அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலயம், இறம்பைக்குளம், 1வது பதிப்பு, ஜனவரி 2008. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், 2ம் குறுக்குத் தெரு). xxxxviii, 135 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20.5 சமீ. ஒன்பது பிரிவுகளைக்கொண்ட இம்மலரின் முதலாவது பிரிவில் ஆசியுரைகளும், வாழ்த்துச் செய்திகளும், அனுபவச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவில் செயலாளரின் நன்றியுரையும் மலராசிரியர் உரையும் உள்ளன. மூன்றாவது பிரிவில் ஸ்ரீ கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலயம் உருக்கொண்ட வரலாறு, பற்றிடம் கொண்டாள் புதுமை காணீர் என்பன இடம்பெற்றுள்ளன. நான்கு முதல் எட்டாம் பிரிவு வரை கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வழிபாடு (சப்த மாதர்கள் வழிபாடு/ பெண்தெய்வ வழிபாடும் மனித வாழ்வும்/ ஸ்ரீசக்கரத்தின் வடிவ அமைப்பும் யந்திர பூஜையும்/ அம்பிகையின் வழிபாட்டில் நடனம்/ காளிதேவியின் அருள்/ யாக சமித்துக்களும் அவற்றின் பலன்களும்/ அம்பிகையின் நவராத்திரிச் சிறப்பு), தத்துவம் (கும்பாபிஷேகத் தத்துவம்/ ஆலய அமைப்பும் தத்துவமும்/ சைவத்திருக்கோவிலில் விமானம்/ ஸ்தம்பத் தத்துவம்/ கும்பாபிஷே கக் கிரியை விளக்கமும் தீபாராதனையின் தத்துவமும்/ குத்துவிளக்கின் விளக்கம்/ சாக்த நெறியும் அதன் தொன்மையும்/ ஆகமம் கூறும் அம்பாள் ஆலய விதிமுறைகள்/ திருமந்திரம் கூறும் சக்தி/ வேள்வித் தத்துவங்கள்/ அம்பிகை விரும்பி அமரும் அபூர்வ வாகனங்கள்), மகத்துவம் (தேவி ஸ்ரீசண்டிகா பரமேஸ்வரியின் அவதார நோக்கமும் சிறப்பும்/ வாழ்வுமானவள் துர்க்கா வாக்குமானவள்/ மகா சக்தியின் மகத்துவ வடிவங்கள், அபூர்வ ஸ்லோகம்/ யாதுமாகி நின்றாய் என் அம்மா தாயே நீ யாதுமாகி நின்றாய்/ அன்னை ஆதிபராசக்தியின் பத்த வடிவங்கள்), சித்தாந்தம் (சைவசித்தாந்தத்தில் சக்தி தத்துவம்/ சைவ சித்தாந்தமும் திருக்கோவில் அமைப்பும்), சமயமும் வாழ்வும் (சைவ வாழ்வியலில் அறநோக்கும் அறிவியல் நோக்கும்/ கோமாதா தரிசனம்/ ஆலயங்கள் பயிற்சிக் கூடங்கள் சமயங்கள் பயிற்சி நெறிகள்/ மனம் எனும் மதயானை) ஆகிய விடயங்களில் இக்கட்டுரைகள் தனித்தனிப் பிரிவுகளில் உள்ளன. இறுதிப் பிரிவான அம்பிகையின் பாமாலையில் அம்பிகை தொடர்பான தமிழிசைப் பாடல்களும், திருவூஞ்சல், நாமாவளிகள், ஸ்தோத்திரங்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இம்மலரின் மலராசிரியர் குழுவில் ப.முருகராஜ், நந்தினி தர்மலிங்கம், குருசாமி சுந்தரசர்மா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 048409).

ஏனைய பதிவுகள்

Real money Blackjack

Content Which Online Blackjack Webpages Gets the Best Incentives? You’re Not able to Availableness Casinoscanada Com Game Assortment Usually do not Split up Two 5s