14118 களுவாஞ்சிக்குடி சைவ மகாசபையின் பொன்விழா சிறப்பு மலர் 1952-2002.

மலர் வெளியீட்டுக் குழு. களுவாஞ்சிக்குடி: சைவ மகாசபை, 1வது பதிப்பு, 2002. (களுவாஞ்சிக்குடி: நியு குட்வின் அச்சகம்). viii, 95 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. இம்மலரில் ஆசிச்செய்திகளைத் தொடர்ந்து, சபையின் சரித்திரத்தில் சில நீங்கா நினைவுகள், களுவாஞ்சிக்குடி சைவ மகாசபைத் தலைவர்கள், பொன்விழாக் காணும் சைவ மகாசபையும் பணிகளும், செயலாளரின் இதயத்திலிருந்து, பொருளாளர் அழைக்கின்றார், இறைவழிபாட்டில் பெண்களின் பங்கு, இந்தக் கோட்பாடுகளில் காணப்படும் ஒழுக்கவியல் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம், ஒரு சர்வதேச ஆத்மீகப் பிரார்த்தனை, அபிஷேகங்களினால் ஆன்மாக்கள் பெறும் பலாபலன்கள், இறைவழிபாடும் விநாயகர் வணக்கத்தின் முதன்மையும், புலம்பெயர்ந்த தமிழர்கள், களுவாஞ்சி பிரதேசத்தில் நிலைபெற்றுள்ள பாரம்பரிய கலை பறைமேளக் கலை, சைவநெறி காக்கும் சைவ மகாசபை, சுந்தரப் பொன்விழா வாழ்க, வானுறையும் தெய்வத்தினுள், இலகு தியானம், இந்து மாணவர்கள் எப்படி இருப்பார்கள், வாழ்த்துகிறோம், களுவாஞ்சிக்குடி சைவ மகாசபையின் பொன்விழாவன்று பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுபவர்கள், இந்து கலாசாரத் திணைக்களம் நடாத்திய அகில இலங்கை ரீதியான போட்டிகளில் பரிசில்களும் சான்றிதழ்களும் பெற்றவர்கள், பொன்விழா போட்டி முடிவுகள், பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள், சைவ மகாசபையின் செயற்குழுவில் இருந்தவர்களும் இருப்பவர்களும், களுவாஞ்சிக்குடி சைவ மகாசபை உத்தியோகத்தர்கள், நன்றிகள் ஆகிய 25 தலைப்புகளில் விடயதானங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48889).

ஏனைய பதிவுகள்