14122 கைதடி மேற்கு இணுங்கித்தோட்டம் அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம் முத்துக்குமரன் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

சி.மதீசன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: இணுங்கித்தோட்டம் அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம், கைதடி மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxix, 111 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-7487-01-4. 05.08.2018 அன்று கும்பாபிஷேக தினத்தையொட்டி வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரில், ஆசிச் செய்திகள், வாழ்த்துரைகள் ஆகியவற்றுடன், இதழாசிரியரின் உள்ளத்திலிருந்து (சி.மதீசன்), கைதடி மேற்கு இணுங்கித்தோட்ட அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வரலாறு (சி.மதீசன்), இணுங்கித்தோட்ட கந்தசுவாமி ஆலய ஊஞ்சல் பாட்டு, சைவ சமயமும் அறநெறி வாழ்வும் (அம்பலவாணர் லோகநாதன்), ஆறுபடை வீடுகொண்ட அழகன் முருகன் (சின்னத்தம்பி சிவரட்ணராஜா), கந்தசஷ்டியின் மகிமை (சீவரட்ணம் இலகுமீகரன்), ஆன்ம ஈடேற்றம் தரும் ஆலய வழிபாடு (ஸ்ரீ சிவசக்தி ஈஸ்வரி மகேந்திரன்), பக்தர்க்கு சஷ்டி கவசம் தந்த பாலதேவராயன் (சிவரட்ணராஜா ஸ்ரீ சிவ ஈஸ்வரி), செம்பொன் மயிலோனும் தைப்பூச நன்னாளும் (சு.பேரின்பலிங்கம்), அண்டர்பதி குடியேற்றமும் மண்டசுரர் உருமாற்றமும்- சூரசம்ஹாரம் (பூமகாதேவி அரசகிருஷ்ணன்), இணுங்கித்தோட்ட கந்தசுவாமியாரின் அற்புத மகிமை (நா.திருச்செந்திநாதன்), உலகு உய்ய உதித்த கௌரிபாலன் (இராசையா இரமேஷ்), வீரமகேந்திரபுரம் தூது சென்ற வீரபாகு (சிவமணி செல்வராஜா), திருமுருகனும் வைகாசி விசாகமும் (சிவராஜா சிவதர்சினி), சைவசமய விளக்கங்கள் சில (செ.றஜீத், சி.மதீசன்), கோபுரம் உயர்வாக இருப்பதன் அவசியம் (ச.சண்முகரத்தினம்), கோபுர தரிசனம் பாவவிமோசனம் (சி.தங்கரத்தினராஜா), அருளாளர்களால் இலக்கியத்தில் காட்டப்படும் சூரசம்ஹாரம் (சதாசிவம் யோகேஸ்வரன்), கோபுரம் இல்லையென்ற அடியார் குறையைக் களைந்தான் அழகான செம்பொன் மயிலோன் (சி.சிவரட்ணராசா) ஆகிய கட்டுரைகளும் கணக்கு வழக்கறிக்கை, கோவிலுக்குரிய ஆதன விபரம் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Bet Redkings Opinion 2024

Content Commission And you may Rtp In the Redkings Gambling establishment Redkings Opinion To have 2024 The newest Ratings Gambling enterprise Redkings Most recent Extra