14128 சாந்தம் புதிய மண்டபத் திறப்பு விழா சிறப்பு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. வவுனியா: பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம், 1வது பதிப்பு, நவம்பர் 1998. (கொழும்பு 11: இராஜேஸ்வரி அச்சகம், 18, பிரின்ஸ் வீதி). 74 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ. சாயி சேவையிலுள்ள சி.முத்துலிங்கம் அவர்களை நிலையத் தலைவராகக் கொண்டியங்கிவரும் வவுனியா: பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம், தனக்கென ஒரு புதிய கட்டிடத்தினை பொதுமக்களின் நிதிவளத்துடன் கட்டிமுடித்து 2.11.1998 அன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்த போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35694/34508).

ஏனைய பதிவுகள்