வீ.வ.நம்பி (மலராசிரியர்). கனடா: உலக சைவப் பேரவை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (கனடா: Royal Graphic Inc,Unit 30,3031,Markam road,Scarborough,Ontario). 114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21 சமீ. உலக சைவப் பேரவை என்பது லண்டனில் சிவநந்தியடிகள் என்பாரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த பேரவை மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உலக சைவ மாநாடு பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இம்மாநாடு உலக சைவப் பேரவை மாநாடு என்றும் அழைக்கப்பெறுகிறது. இவ்வமைப்பின் ஏழாவது மகாநாடு கனடாவில் 1999ஆம் ஆண்டில் ஜுலை 30,31, ஓகஸ்ட் 1 ஆகிய மூன்று தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அவ்வேளை ‘சிவஞானம்” சஞ்சிகையின் சிறப்பிதழாக வெளியிடப்பெற்ற மலர் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25004).