14130 சிவஞானம்: ஏழாவது உலக சைவ மாநாடு கனடா, 1999: சிறப்புமலர்.

வீ.வ.நம்பி (மலராசிரியர்). கனடா: உலக சைவப் பேரவை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (கனடா: Royal Graphic Inc,Unit 30,3031,Markam road,Scarborough,Ontario). 114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21 சமீ. உலக சைவப் பேரவை என்பது லண்டனில் சிவநந்தியடிகள் என்பாரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த பேரவை மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உலக சைவ மாநாடு பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இம்மாநாடு உலக சைவப் பேரவை மாநாடு என்றும் அழைக்கப்பெறுகிறது. இவ்வமைப்பின் ஏழாவது மகாநாடு கனடாவில் 1999ஆம் ஆண்டில் ஜுலை 30,31, ஓகஸ்ட் 1 ஆகிய மூன்று தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அவ்வேளை ‘சிவஞானம்” சஞ்சிகையின் சிறப்பிதழாக வெளியிடப்பெற்ற மலர் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25004).

ஏனைய பதிவுகள்

17016 மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம்.

என்.செல்வராஜா. பிரித்தானியா: அயோத்தி நூலக சேவைகள்-பிரித்தானிய கிளை, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

14718 மௌன வலிகளின் வாக்குமூலம்.

சமூக சிற்பிகள் (மூலம்), சர்மிளா சுப்பிரமணியம் (தமிழாக்கம்), கௌரி அனந்தன் (தொகுப்பாசிரியர்). ராஜகிரிய: சமூகச் சிற்பிகள், The Social Architects, 1003/4, Park Lane, 1வது பதிப்பு, மே 2017. (கொழும்பு 13: Crescerdoo