04.04.2004. பால. கோபாலகிருஷ்ண சர்மா (தொகுப்பாசிரியர்). சுழிபுரம்: பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 12: வாக்மி அச்சகம், 258/3, டாம் வீதி). iii, 92 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×21 சமீ. ஆசிச் செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், அயலகத்திலிருந்து ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இம்மலரின் ஆக்கங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ‘கட்டுரைகள்” என்ற பிரிவில் ஆலய வளர்ச்சியின் வரலாறு (வே.சத்தியமூர்த்தி சர்மா), கோபுர தரிசனம் கோடி புண்ணியம் (சிவ.பாலகுமார சர்மா), ஒரு திருமுருகன் வாந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய (பூரண. தியாகராஜக் குருக்கள்), இரதோற்சவ மகிமை (தியாகராஜ கமலராஜக் குருக்கள்), இந்துக் கலையில் சிற்பம் (ஞானபண்டித சபா வாசுதேவக் குருக்கள்), கந்தபுராணம் தோன்றிய வரலாறு (பா.முருகதாச சர்மா), குங்குமம் இடுவதற்குக் காரணம் (சு.வரதராஜ சர்மா), ஆகமங்களில் சுப்பிரமணியன் (ஸ்ரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா), நன்னெறி செலா அவுணர் நாயகன்முன் உய்த்தான் (பொன்னம்பலவாணர்), என் இரு கண்ணே கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி (பொன். பாக்கியம்), சுழிபுரம் பறாளை காசி விசுவநாத சிவலிங்கப் பெருமான் (சுழிபுரம் நடேசன் சிவசண்முகமூர்த்தி) ஆகிய கட்டுரைகளும், ‘கவிதைகள்” என்ற பிரிவில் சு.சண்முகரத்ன சர்மா, செல்வி சந்திரா, பறாளை வே.சத்தியமூர்த்தி சர்மா, பண்டிதை பொன். பாக்கியம், சுழிபுரம் நடேசன் சிவசண்முகமூர்த்தி ஆகியோரின் கவிதைகளும், ‘அயலகத்திலிருந்து” என்ற பிரிவில் ஞானபூமி, மங்கை,திருவாவடுதுறை ஆதீனம், பாலபாடம் ஆகியவற்றிலிருந்து தேர்ந்த பகுதிகளாக, தேவாரத்தில் இலக்கணக் கூறுபாடுகள், திருஞானசம்பந்தரின் பாடல்களில் இசை, தமிழகக் கோயில் சிறப்பு, கும்பாபிஷே கமென்னும் பெருஞ்சாந்தி, சைவ சமயம், மங்களம் தரும் வேதம்-ஆகமம்-யாகம், அம்பிகை வழிபாட்டின் தொன்மை, பிரதோஷ விரதம், கும்பாபிஷேகங்கள் ஏன்?, இஷ்ட தெய்வ வழிபாடு-சிவன் ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இச்சிறப்பு மலரின் ஆசிரியர் சுழிபுரம் பிரம்ம ஸ்ரீ பால.கோபாலகிருஷ்ண சர்மா, ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்பவர். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18938).