சிவமகிழி (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: சைவநெறிக்கூடம், Europapaltz 1,3008 Bern, 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). 340 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19.5 சமீ. வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் கூடிய இம்மலரில் ஐரோப்பாத் திடலில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோயில் திருப்பணி, ஞானலிங்கேச்சுரர் திருக்கோயில் பாடல்கள் (ச.வே.பஞ்சபட்சரம்), அறிவே தெய்வம் (அருட்செல்வி யோகநாதன் ஜெயகௌரி), குடமுழுக்கு வாழ்த்துப்பா (தூபீஸ்), செந்தமிழால் எனை வளர்த்த (மு.பெ.சத்தியவேல் முருகன்), தெய்வத் தமிழில் வழிபடுவோம் (தர்மலிங்கம் சசிகுமார்), தமிழில் சைவத்தின் சான்றுகள் (தூபீஸ்), ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வுகள் (சீவகன் பூபாலரட்ணம்), திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் (த.ஜீவராஜ்), இளைய தலைமுறைக்கு (சுபாங்கி), உய்யும் சைவர்கள் (சிவ. உதயகுமார்), உயிர்களிடத்து அன்பே சிவம் (மறவன்புவவு க.சச்சிதானந்தன்), புலம்பெயர் நாடுகளில் (தி.குணசுதன்), புலத்தில் தமிழ் வழிபாடு (ஜேர்மன் ஆலன் தமிழ் வழிபாட்டுக் கழகம்), சைவம் என்னும் செந்நெறி (நிர்மலாதேவி தர்மலிங்கம்), எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் (பிரித்தானியா அன்பே சிவம் சைவநெறிக்கூடம்), கங்கை நதி (வசந்தி பிரேமச்சந்திரா), செந்தமிழாய் நறுந்தேனாய் (அனுஷியா சாந்தன்), சுவிஸ் நாட்டில் திருக்குடமுழுக்குக் காணும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சரர் (கணநாதன் ராஜ்கண்ணா), தமிழ் மொழியில் மந்திரங்கள் (கனடா ஆர்.ஜி.கல்வி நிலையம்), சிவ சிவ சிவசக்தி (தி.இலங்கேஸ்வரன்), மனிதனும் அவனது வாழ்வும் (வே.சண்முகராசா), குடமுழுக்குப் பாமாலை (சிவனடியான்), எமது ஆலயங்களில் இன்றைய தேவைகள் (அ.வேந்தர்கோன்) தமிழ்வழிபாடு முழக்கமும் பழக்கமும் (பா.சீனிவாஸ்), இறைவனை அடையும் வழிமுறைகள் (சிவப்பிரியன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மலரின் இறுதிப் பகுதியில் வெளியீடுகள் பத்திரிகைச் செய்திகள், மூரோவின் கவிதைத் தொகுப்பு, கோவில் படங்கள் என்பன பின்னிணைப்புகளாகக் காணப்படுகின்றன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22586).