14134 சைவம் போற்றுதும் -2018.

கி.பிரதாபன், வி.துலாஞ்சனன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 6: இலங்கை சைவநெறிக் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு: எஸ்.சி.எஸ். பிரின்ட்). xiv, 50 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. 30.06.2013 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இலங்கை சைவநெறிக் கழகத்தின் ‘சைவம் போற்றுதும் – 2018” விழா 07.04.2018 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றவேளையில் வெளியிடப்பெற்ற மலர் இது. அருளாசியுரை, வாழ்த்துரைகளுடன் வெளிவரும் இம்மலரில் இலங்கைச் சைவநெறிக்கழக உறுப்பினர் விபரம், மேற்படி கழகத்தால் அன்றையதினம் வழங்கப்பெற்ற சைவநெறிக் காவலர் விருது, சைவநெறிச் செல்வர் விருது, சைவமாமணி விருது, சைவசமூகச் செம்மல் விருது, மருத்துவமாமணி விருது, ஆசிரியமாமணி விருது, சைவநெறிப் புரவலர் கலாநிதி மு.கதிர்காமநாதன் விருது ஆகிய விருதுகளைப் பெறுவோர் விபரம் என்பனவும் இடம்பெற்றுள்ளன. மேலும் சைவ சமயம், சைவசமயத்தில் வழிபடு கடவுள், சைவசமய நூல்கள், விடைக்கொடி ஆகிய சைவசமய அறிவுக் கட்டுரைகளும், சிவபூமிச் சைவ முதலிகள் என்ற பிரிவில் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், ஸ்ரீ காசிவாசி சாம்பவஸ்ரீ செந்திநாத ஐயர், ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற்பிள்ளை ஆகியோர் பற்றியும், சிவபூமிச் சைவத் தேசிகர் என்ற பிரிவில் சைவப்பெரியார்களான மு.திருவிளங்கம், சு.சிவபாதசுந்தரம், காசிநாத அருணாசல தேசிகமணி, பண்டிதர் மு.கந்தையா ஆகியோர் பற்றியும் சிவபூமிச் சைவத் தாதையர் என்ற பிரிவில் கோமான் பொன். இராமநாதன், சைவப்பெரியார் கா.சூரன் ஆகியோர் பற்றியும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. நூலகம் நிறுவன இணையத்தள நூலக சேர்க்கை இலக்கம் 071601)

ஏனைய பதிவுகள்

Mermaid’s Pearl geab Jocuri Novomatic

Content Site chiar acolo | Mermaids pearl Recensămân – Termeni legali CasinoAlpha Casino bonus însă depunere pe înscriere Informații Asupra Mermaid’decedat Pearl geab Jocurile au

15734 பூவிதழும் புனிதமும்: சிறுகதைத் தொகுதி.

உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம். நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2016. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி). xiii, 96 பக்கம், விலை: ரூபா 350.,