14134 சைவம் போற்றுதும் -2018.

கி.பிரதாபன், வி.துலாஞ்சனன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 6: இலங்கை சைவநெறிக் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு: எஸ்.சி.எஸ். பிரின்ட்). xiv, 50 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. 30.06.2013 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இலங்கை சைவநெறிக் கழகத்தின் ‘சைவம் போற்றுதும் – 2018” விழா 07.04.2018 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றவேளையில் வெளியிடப்பெற்ற மலர் இது. அருளாசியுரை, வாழ்த்துரைகளுடன் வெளிவரும் இம்மலரில் இலங்கைச் சைவநெறிக்கழக உறுப்பினர் விபரம், மேற்படி கழகத்தால் அன்றையதினம் வழங்கப்பெற்ற சைவநெறிக் காவலர் விருது, சைவநெறிச் செல்வர் விருது, சைவமாமணி விருது, சைவசமூகச் செம்மல் விருது, மருத்துவமாமணி விருது, ஆசிரியமாமணி விருது, சைவநெறிப் புரவலர் கலாநிதி மு.கதிர்காமநாதன் விருது ஆகிய விருதுகளைப் பெறுவோர் விபரம் என்பனவும் இடம்பெற்றுள்ளன. மேலும் சைவ சமயம், சைவசமயத்தில் வழிபடு கடவுள், சைவசமய நூல்கள், விடைக்கொடி ஆகிய சைவசமய அறிவுக் கட்டுரைகளும், சிவபூமிச் சைவ முதலிகள் என்ற பிரிவில் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், ஸ்ரீ காசிவாசி சாம்பவஸ்ரீ செந்திநாத ஐயர், ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற்பிள்ளை ஆகியோர் பற்றியும், சிவபூமிச் சைவத் தேசிகர் என்ற பிரிவில் சைவப்பெரியார்களான மு.திருவிளங்கம், சு.சிவபாதசுந்தரம், காசிநாத அருணாசல தேசிகமணி, பண்டிதர் மு.கந்தையா ஆகியோர் பற்றியும் சிவபூமிச் சைவத் தாதையர் என்ற பிரிவில் கோமான் பொன். இராமநாதன், சைவப்பெரியார் கா.சூரன் ஆகியோர் பற்றியும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. நூலகம் நிறுவன இணையத்தள நூலக சேர்க்கை இலக்கம் 071601)

ஏனைய பதிவுகள்

12547 – கவிதைகளையும் பாடல்களையும் சுவைப்போம்: மேலதிக மொழி விருத்திப் பாடநெறிதமிழ்.

M.M.M. முஹ்ஸின், யு.பு.குணரட்ண. கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

14574 இலைகளே என் இதயம் (கவிதைத் தொகுதி).

நீ.பி.அருளானந்தம். நாவலப்பிட்டி: திருமகள் பதிப்பகம், இல. 10, பெனடிக்ட் அவென்யூ, பவகம, 1வது பதிப்பு, மார்கழி 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). vi, 77 பக்கம், சித்திரங்கள், விலை:

14605 சிறகிழந்த கிளிகள்.

தானா. மருதமுத்து. ஹட்டன்: பாக்யா பதிப்பகம், இல. 4A, ஸ்டார் சதுக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (கொழும்பு 13: GOD Creative Lab). xix, 50 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

12592 – ஆரம்ப விண்ணியல்.

இ.செந்தில்நாதன். சென்னை: நீலமலர் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1986. (சென்னை 86: சாலை அச்சகம், இல. 11, திருவீதியான் தெரு, கோபாலபுரம்). (8), 9-100 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: இந்திய ரூபா

14084 சைவ நெறி: தரம்8.

இ.மகேந்திரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: நூல் வெளியீட்டுக் குழு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு 2016 (கொழும்பு: சென்வின் தனியார் நிறுவனம், இல. 35/3, கேரகல வீதி, ஹெலும்மஹர, தெல்கொட). xiiஇ

14325 அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: நீதி, அரசியலமைப்பு அலுவல்கள், இன அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). vi, 161 பக்கம், 6