14135 தாந்தாமலை மாட்சி: தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு மலர்-2011.

பாலிப்போடி இன்பராஜா (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: தாந்தாமலை முருகன் ஆலய பிள்ளையார் கோயில் குடமுழுக்கு விழா மலர்க்குழு, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). 215 பக்கம், 24 தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21.5 சமீ. முன்னுரை, பதிப்புரை, ஆசியுரை, வாழ்த்துரைகளையடுத்து இம்மலரில் கவிதைப் பூங்கா என்ற பிரிவில் 12 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தொடரும் கட்டுரைப் பகுதியில் 26 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தாந்தாமலை ஆலயத்தின் பண்டைய வரலாறு (க.தங்கேஸ்வரி), கிழக்கு மாகாணத்தில் முருக வழிபாடும் தாந்தாமலை முருகன் கோவிலும்-சில சிந்தனைகள் (சி.மௌனகுரு), தாந்தாமலை சில தொன்மைத் தகவல்கள் (திமிலைத் துமிலன்), தா என்போர்க்கு இந்தா என்று வரமளிக்கும் தாந்தாமலை முருகன் ஆலயம் (க.வி.விக்னேஸ்வரன்), வழிபாட்டியலில் தாந்தாமலை ஆலயத்தின் மறுமலர்ச்சி (க. கனகநாயகம்), தாந்தாமலை முருகன் ஆலயமும் சாதுக்களும் (மா.வன்னியசிங்கம்), தேரோட்டப் பாரம்பரியமும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரமும் (க.தங்கேஸ்வரி), வழிபாட்டியலில் தாந்தாமலை ஆலயம் (முருகு தயாநிதி), கொழும்பு அருங்காட்சியகத்திலே தமிழ்ச் சாசனம் எழுதப்பட்ட விளக்கு (சி.பத்மநாதன்), மலையில் பிள்ளையாரும் சிலிந்தி மரமும் (க.மாணிக்கவாசகர்), மட்டக்களப்பு கோவிற்குளம் காசி லிங்கேஸ்வரர் கோயிலும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவிலும் (மா.செல்வராஜா), மட்டக்களப்பு மாநிலத்தில் கண்ணகி வழிபாடு (வெல்லவூர்க் கோபால்), தாந்தாமலை வரலாற்று அம்மானை: சில அவதானிப்புகள் (சி.யோகராசா), தாய்வழிச் சமுதாயமும் தாய்த் தெய்வ வழிபாடும் (சாந்தி கேசவன்), இந்துப் பண்பாட்டில் கவனிக்கப்படவேண்டிய பக்கம்: மட்டக்களப்பின் தெய்வ வழிபாட்டினை மையப்படுத்திய சில சிந்தனைகள் (சி.மௌனகுரு), தாந்தாமலை (அன்புமணி), தாந்தாமலை பற்றி இதுவரை வெளிவந்த ஆக்கங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் (ரஞ்சிதமலர் கருணாநிதி), தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலயம்: தாந்தாமலை அன்னதான சபையின் உருவாக்கமும் அது ஆற்றிவரும் மகத்தான சேவையும் (சின்னத்தம்பி குருபரன்), 1956இன் பின் தாந்தா வழிபாட்டின் தோற்றுவாய் (ஐ.சுப்பிரமணியம்), தாந்தாமலையின் உரித்துடைமையில் அமரர் சோ. உ. எதிர்மன்னசிங்கம் அவர்களின் பங்களிப்பு (பா.ஸ்ரீஸ்கந்தஜெயா), தாந்தாமலை பற்றிய ஒரு மீள்பார்வை (க.திருநாவுக்கரசு), கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீச்சரத்தின் ஊடாக வெளிவரும் இந்துப் பண்பாடு (ச.சந்திரசேகரம்), கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீச்சரம் மீது பாடப்பெற்ற பக்திப் பனுவல்கள் (த.மேகராசா), கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயமும் மகிமையும் (ந.ஜெயரூபன்), இந்து மதத்தின் பெருமை (கு.மகேஸ்வரமூர்த்தி), தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபை 1981 முதல் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இம்மலரின் உருவாக்கத்திற்குப் பொறுப்பான மலர்க்குழு உறுப்பினர்களாக க.மாணிக்கவாசகர், க.சிவகுருநாதன், பூ.சுரேந்திரராஜா, இ.சாந்தலிங்கம், பா.சபாரெத்தினம், மு.கணேசலிங்கம், அ.தயாசீலன், செ.முருகுப்பிள்ளை, மு.தயாநிதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

16211 நினைவுச் சாரலில் எட்வேர்ட் செய்த்.

சிராஜ் மஷ்ஹூர். அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர). 58 பக்கம், விலை: ரூபா 120.,