14136 தாய்மையின் பொலிவு தூய அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 150ஆவது ஜனன ஆண்டு விழாச் சிறப்பு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 06: ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சமிதி, 59, விவேகானந்தா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). (4), 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. அன்னை சாரதா தேவி (22.12.1853-20.07.1920) ஆன்மீகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவியும் ஆவார். இராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூணாக இருந்தவர். அன்னை சாரதா தேவி கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22 ஆம் நாள் ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தார். இவர் பள்ளி சென்று படித்ததில்லை என்ற போதும் பிற்காலத்தில் தமது சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.ஐந்து வயதில் இவர், ராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் துணைவியானார். அன்னை சாரதாதேவியின் 150ஆவது ஜனன தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்ட வேளை, வெள்ளவத்தை (கொழும்பு) ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சமிதியின் சமய வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து தமிழ் ஆங்கில சிங்கள மொழியில் ஆசியுரைகள், வாழ்த்துரைகள், அன்னை ஸ்ரீ சாரதா தேவி பற்றிய ஆக்கங்கள் என்பவற்றைக் கொண்டதாக இம்மலரைத் தொகுத்தளித்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39190).

ஏனைய பதிவுகள்

Best Nz Web based casinos 2024

Blogs Online casinos And Wagering In america Can i Make On-line casino Dumps And you will Withdrawals Securely And you will Securely? Just what Better