14137 திருக்கேதீச்சரம்: திருக்குடத் திருமஞ்சன மலர்.

வெளியீட்டுக் குழு. மன்னார்: திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, திருக்கேதீச்சரம், 1வது பதிப்பு, ஜுலை 1976 (கொழும்பு 10: அல்பியன் அச்சகம், இல. 157, ஜயந்த வீரசேகர மாவத்தை). (6), xiii, (26), 208 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×21.5 சமீ. 04.07.1976 அன்று வெளியிடப்பட்டுள்ள இச்சிறப்பு மலரில் அருளாசிகள், வாழ்த்துரைகளுடன் சிவபுராண படன விதி (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்), திருக்கேதீச்சரமும் நாவலர் அவர்களும் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), ஈழமும் பதிகம் பாடிய சம்பந்தரும் (ஏழாலை மு.ஞானப்பிரகாசம்), நித்திய பூசையும் அதன் தத்துவமும் (எஸ்.சுவாமிநாதசிவாசாரியார்), கும்பாபிஷேக முறைகளும் விளக்கமும் (நயினை ஐ.கைலாசநாதக் குருக்கள்), சிவலிங்க தத்துவ விளக்கமும் வழிபாடும் (சிவஸ்ரீ எஸ். காளஹஸ்தீஸ்வரக் குருக்கள்), இந்து சாதனம் (மு.மயில்வாகனம்), சைவமும் பௌத்தமும் (ஆ.வேலுப்பிள்ளை), ஈழத்துப் புராணங்கள் (பொ.பூலோகசிங்கம்), தேவாரப் பண்முறை (பி.சாம்பமூர்த்தி), இறைக் காதல் (சி.தில்லைநாதன்), Chola inscriptions from Mantai (S.Pathmanadhan)மலையகத்திற் சைவம் (நா.முத்தையா), பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சைவ மறுமலர்ச்சி (க.அருமைநாயகம்), மன்னார் மாவட்டத்தின் குடிசனத்தொகையும் வளங்களும் அபிவிருத்தியும் (பொ. பாலசுந்தரம்பிள்ளை), இலங்கையிற் சைவக்கல்வியின் எழுச்சி (வ.ஆறுமுகம்), திருக்கேதீச்சரம் – மரபுகளும் ஐதீகங்களும் (வி.சிவசாமி), திருவளர் திருக்கேதீச்சரம் (ஆர்.ராமசேஷன்), திருக்கேதீச்சரமும் திருமுறைகளும் (தி.பட்டுச்சாமி ஓதுவார்), திருவாசகத்தில் சைவசித்தாந்தம் (ந.ரா.முருகவேள்), ஈழத்திற் கண்ணகி வழிப்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் (எம்.சற்குணம்), The significance of the Vel Festivals in colombo((Maheswary Balakrishnan), திருக்கோயிற் கிரியைகளில் இசைக்கருவிகள் (ஞானா.குலேந்திரன்), ஈழநாட்டில் சித்தர் மரபு (ச.அம்பிகைபாகன்), இலங்கையிற் சைவர்கள்: குடிசனப் புவியியல் நோக்கு (பொ.பாலசுந்தரம்பிள்ளை), கந்தபுராண கலாசாரம் (செ.தனபாலசிங்கன்), திருநீற்றின் பெருமை (தங்கம்மா அப்பாக்குட்டி), பிறவிப்பிணி (கோ.ஆழ்வாப்பிள்ளை), ஈழநாட்டுச் சைவக்கிரியைகளும் சடங்குகளும் (சிவஸ்ரீ கு.பாலசுந்தரக் குருக்கள்), கௌரியே காட்சியருள்வாய் (வ.கோவிந்தபிள்ளை), நாவலர் தாபித்த வண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலை (சி.கணபதிப்பிள்ளை), கேதீச்சரம் தொழ வைத்த செம்மல் சித.மு.பசுபதிச் செட்டியார் (க.சிவராமலிங்கம்), சிவாகமஞானபாநு சிவஸ்ரீ குமாரசுவாமிக் குருக்கள் (அழலாடி), திருக்கேதீச்சர ஆலயமும் மாந்தைத் துறைமுகமும் (கந்தையா வைத்தியநாதன்), சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் பிள்ளை (பொ.பூலோகசிங்கம்), சிவமணி சேர்.கந்தையா வைத்தியநாதன் (சி.கணபதிப்பிள்ளை), வன்னியும் வன்னியரும் (சி.எஸ். நவரத்தினம்), வன்னி நாட்டுப் பிரிவுகள் – ஆறுகள் – ஊர்ப் பெயர்கள், சிவநெறியின் வளர்ச்சி (குன்றக்குடி அடிகளார்), சுத்த சைவ சித்தாந்தக் கொள்கைகள் (சு.நடேசபிள்ளை),The Philosophy of Yogar Swamigal(Rantana Navaratnam) முன்னேசுவரம் (செ.குணரத்தினம்), ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் (முல்லைமணி வே.சுப்பிரமணியம்), கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர் கோயில் (க.மகேஸ்வரலிங்கம்), வண்ணை வைத்தீசுவரன் கோயில் (சி.சிவகுருநாதன்), நயினாதீவு நாகபூஷணியம்மாள் கோயில் (தமிழடியான்), வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோயில் (நா.சுப்பிரமணியம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 34624).

ஏனைய பதிவுகள்

14295 ஐரோப்பிய பொருளாதார வரலாறு: 1760-1939.

ஆதர் பெர்னி (ஆங்கில மூலம்), றெக்ஸ் ரொட்றீகஸ் (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், ‘சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை

12355 – இளங்கதிர்: 26ஆவது ஆண்டு மலர் 1991/1992.

த.தவவதனி (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1992. (கண்டி: சென்ட்ரல் பிரின்டர்ஸ், 98, டி.எஸ்.சேனநாயக்க வீதி). XVI, 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25*18.5 சமீ. இவ்விதழில் இலங்கைப்

14665 அலகில் சோதியன்(நாடகங்கள்).

பொ.சத்தியநாதன். வவுனியா: இந்து மன்றம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xix, 78 பக்கம், விலை: ரூபா 250.,

14579 உருக்கி வார்த்த உணர்வுகள் (கவிதைகள்).

பிறேமா எழில். யாழ்ப்பாணம்: சாரல் வெளியீட்டகம், சித்தங்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvi, 80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5

12210 – பிரவாதம் இதழ்எண் 7: ஒக்டோபர் 2011.

க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 122 பக்கம், விலை:

14446 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: ஏகபரிமாண உந்தமும் கணத்தாக்கும்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 35