இ.வடிவேல், மு.சுந்தரலிங்க தேசிகர், வே.வரதசுந்தரம் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). (12), 160 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5 x 21 சமீ. 07.02.2001 அன்று வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரில் ஆசிச் செய்திகள், வாழ்த்துரைகள் என்பவற்றுடன், கர்வமடக்கிய காளிகா தேவி (சாமி விஸ்வநாதக் குருக்கள்), தமிழ் மறை கூறும் பொது அறங்கள், திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் (சோ.இரவிச்சந்திரக் குருக்கள்), கும்பாபிஷேகத்தின் சிறப்பு (ஸ்ரீலஸ்ரீ சு.கு.முத்துக்குமாரசாமிக் குருக்கள்), ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில் சப்த தள இராஜகோபுரம், கருவறை விமானம் ரசானு பவமும் பிரம்மானுபவமும் (பண்டிதர் இ.வடிவேல்), பூதசுத்தி அந்தர்யாகம் (சி.குஞ்சிதபாதக் குருக்கள்), அன்னையின் அருளாட்சி (பூரண தியாகராஜக் குருக்கள்), திருகோணமலை பத்திரகாளி கோவில் மஹா கும்பாபிஷேகம் ஒரு நோக்கு (சிவஸ்ரீ ப.முத்துக்குமாரசாமி குருக்கள்), பூத்து நிற்கும் பேரருள் (வசந்தா வைத்தியநாதன்), நல்ல காரியங்களைச் செய்ய முற்படும் போது மூன்று முறை சாந்தி என்று சொல்லப்படுவதன் நோக்கம் (சுவாமி ஏ.பார்த்தசாரதி), ஸ்ரீ சக்கரம் (மு.சுந்தரலிங்கம் தேசிகர்), சக்தி வழிபாடு பற்றிய சில வரலாற்றுச் சிந்தனைகள் (கனகசபாபதி நாகேஸ்வரன்), ஆலயமும் பிரார்த்தனையும் மனிதப் பிறவியின் உயர்நோக்கத்தை நிறைவு செய்கின்றன (குமாரசாமி சோமசுந்தரம்), அம்பிகை வழிபாட்டின் தொன்மை (எஸ்.இராமநாத சிவாச்சாரியார்), கும்பாபிஷே கமென்னும் பெருஞ்சாந்தி (என்.ஸ்ரீநிவாசன்), மங்களம் தரும் வேதம் – ஆகமம்-யாகம் (எஸ்.நாராயணசுவாமி), குறுமுனியால் வரமுனி பெற்ற சாபமும், அதனால் ஜகத்திற்குக் கிடைத்த பொக்கிஷமும் (பிரம்மஸ்ரீ சிவகுமாரக் குருக்கள்), கோபுர அமைப்பும் அதன் தத்துவங்களும் (ஸ்ரீ.க.பாலச்சந்திரசர்மா), அருள் தரு அன்னை அம்பிகை (திரு.கணேசர் சைவசிகாமணி), சக்திதாசன் காட்டிய பக்தி நெறி (சித்திரதேவி பத்மநாதன்), பாராயணஞ் செய்தற்குரிய தேவீஸ்தோத்திர மாலை (பூரண. தியாகராஜ கமலராஜக் குருக்கள்), கண்டறியாதன கண்டோம் (கந்தையா இராசநாயகி), கோபுரமும் அதன் உட் பொருள் விளக்கமும் (கந்ததாஸ் இரவீந்திரராஜா), கும்பகோணம், வலங்கைமான் ஸ்தபதி திரு.மாரிமுத்து இராஜேந்திரனுடன் செவ்வி (செவ்வி கண்டவர்: இ.வடிவேல்), இலங்கையில் காளி அம்மன் வழிபாடு (சோ.குஹானந்தசர்மா), விளக்கு ஏற்றுவதற்கு பயன்படுத்தும் எண்ணெயின் பலன்கள், தீபம் ஏற்றும் நேரம், கவிஞர்கள் வாழ்வில் காளி (த.சிவநாதன்), சக்தியின் மகத்துவம் (அ.பரசுராமன்), அர்ச்சனைத் தட்டு எதற்காக? (பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்கள்), சக்தி (என்.ஆர். மகேந்திரன்), கால தேவதை அருள்மிகு காளி தேவி (க.இராசரெத்தினம்), கும்பாபிஷேக மகிமை, திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் திருப்பள்ளியெழுச்சி (பண்டிதர் இ.வடிவேல்), திருகோணமலை பத்திரகாளி அம்மன் திருவூஞ்சல் (வே.அகிலேசபிள்ளை), நாதஸ்வரமும், நாட்டியமும் ஆலயமும் (சோ.இரவீச்சந்திரக் குருக்கள்), திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் காவியம் (வ.கோ. வேலுப்பிள்ளை) திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் பதிகம், தீர்த்தம் ஆடும் முறை (சிவஸ்ரீ மு.சண்முகரெத்தினக் குருக்கள்), திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கலிவெண்பா, அன்னை வடிவே அருட் கோபுரம் (மணிமேகலாதேவி கார்த்திகேசு), திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மை தோத்திரம் (சி.விநாசித்தம்பி புலவர்), என்றம்மா தீர்வு?(சி கண்டிதாசன்), திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆதீனகர்த்தா பிரதம குரு வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ சோமஸ்கந்த ஐயர் – இரவிச்சந்திரக் குருக்கள் அவர்களையும் அவர்தம் திருப்பணியினையும் மகிமைப்படுத்தும் வாழ்த்துப்பா மடல் காணாத கண்ணென்ன கண் (நா.சோமகாந்தன்), காளி தேவியின் ரூப பேதங்கள், எங்கள் பத்திரகாளி ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 039876).