14139 திருக்கோணமலை இளைஞர் அருள்நெறி மன்றம்: 25ஆவதுஆண்டு நிறைவு வெள்ளிவிழா மலர்

மலர்க்குழு. திருக்கோணமலை: இளைஞர் அருள்நெறி மன்றம், ஞானசம்பந்தன் வீதி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம், 575, காங்கேசன்துறை வீதி). (58), 60 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22 சமீ. திருக்கோணமலை இளைஞர் அருள்நெறி மன்றத்தினரின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி வெளிவந்துள்ள இம்மலரின் தொகுப்பிற்கு மலர்க்குழுவிற்கு வழிகாட்டியாக க.சி.குலரத்தினம் அவர்கள் பணியாற்றியுள்ளார். ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் வெளிவரும் இம்மலரில், சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணக் கருத்துரைகள் (தவத்திரு. குன்றக்குடி அடிகளார்), உலகமே ஒரு பெரிய சர்வகலாசாலை (ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி), நாதனும் நல்லிசையும் (செல்வி விஜயகுமாரி இராமநாதபிள்ளை), சைவ சமய நெறியின் சமரசம் (டி.டி.நாணயக்கார), அன்பு என்னும் அரண் (சிவஞானசித்தியார்), திருமுறைகள் ஓதித் திருவருள் பெறுவோம் (தி.ந.சிங்காரவேல் முதலியார்), ஒரு சொல் கேளீர் (நா.ரா.முருகவேள்), வழித்துணை (சிவத்திரு தற்புருஷ தேசிகர்), யேவயசயதய (நுஎநடலn றுழழன)இ நடராஜா (ஈவ்ளின் வூட்), பன்னிரு திருமுறைகள் (ந. ரா.முருகவேள்), திருவாசகத்தில் தேவர்கள் படும்பாடு (வ.சுப.மாணிக்கம்), இறையுணர்வு (மு.மு.இஸ்மாயில்), கல்வி (தி.சா.தியாகராஜா தேசிகர்), சைவத் திருமுறைகள் (தொகுப்பு), சேக்கிழார் பெருமை (கவியோகி சுத்தானந்த பாரதியார்), நமது குலதெய்வம் (ஞானசம்பந்தம்), அறிவோடு வழிபடுக (தவத்திரு குன்றக்குடி அடிகளார்), சைவசித்தாந்தமும் தமிழர் பண்பாடும் (ந.ரா.முருகவேள்), மறக் கருணை (தொகுப்பு), சமய உணர்வு (ஆர்.சதாசிவம்), அடிகளாரின் சமரச நெறி (ந.மகேந்திரன்), சைவசமய நூலகப் பணி (பெ.பொ.சிவசேகரனார்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 004387).

ஏனைய பதிவுகள்

Winorama Review 2021 Gratis Spins

Volume Gnome Speel voor de lol – Zekerheid en gefundeerd optreden Bankbiljet stortregenen plus opnieuw permitteren uitbetalen Schapenhoeder vermoedelijk bestaan Winorama Casino? Winorama Rechtstreeks Casino

15161 தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண்.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). xii, 156 பக்கம், விலை: ரூபா