14140 திருக்கோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேக மலர்1994.

மலர்க் குழு. திருக்கோணமலை: திருப்பணிச் சபை, வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில், 1வது பதிப்பு, ஜுலை 1994. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்). (23), 66 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ. 27.07.1994 அன்று வெளியிடப்பெற்றுள்ள இச்சிறப்பு மலரில் வாழ்த்துச் செய்திகள், ஆசிச் செய்திகளுடன், இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோணமலை வில்லூன்றிக் கந்தனின் வரலாறு (பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன்), ஆலயத்தின் புதிய அமைப்புகள் (ஸ்தபதி ஸ்ரீ கந்ததாஸ் ரவிச்சந்திரராஜா), கும்பாபிஷேகம் – ஒரு விளக்கம் (கா.இரத்தின கைலாசநாதக் குருக்கள்), ஆலயம், மூர்த்தி, ஆராதனை (பண்டிதர் இ.வடிவேல்), கந்த விரதங்களின் மகிமை (திருமதி.சி.பத்மநாதன்), திருவூஞ்சல், திருக்கோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி பத்துப் பதிகம் (வே.அகிலேசபிள்ளை), ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய (சிவஸ்ரீ பூரண தியாகராஜக் குருக்கள்), திருக்கோணமலை அருள்மிகு வில்லூன்றிக் கந்த சுவாமி கோவில் வரலாறு (சுதர்சம்பிகை ஏகாம்பரம்), வினைதீர்க்கும் வில்லூன்றிக் கந்தன் (பெ.பொ.சிவசேகரனார்), திருக்கோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமியார் பக்திப் பாமாலை (பண்டிதர் இ.வடிவேல்), நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து (த.அமரசிங்கம்), வில்லூன்றிக் கந்தன் தேர்ச் சிந்து (பண்டிதர் இ.வடிவேல்), வில்லூன்றிக் கந்தன் கீர்த்தனை (த.சாம்பசிவம்), திருக்கோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில் நித்திய, நைமித்திக விசேட உற்சவங்கள் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 027133).

ஏனைய பதிவுகள்