14142 திருவருள் மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக சிறப்புமலர்.

துன்னையூர் ராம்.தேவலோகேஸ்வரக் குருக்கள் (மலராசிரியர்).கொழும்பு 3: ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில்,கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, மே 1996. (கொழும்பு: உதயம் கிராப்பிக்ஸ்). (12), 29+12 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. 0.05.1996 அன்று வெளியிடப்பட்ட இக் கும்பாபிஷேக மலரில், மலரும் மணமும் (துன்னையூர் ராம்.தேவலோகேஸ்வரக் குருக்கள்), நுழைவாயில் (மலர் ஆசிரியர்), ஸ்ரீ முகம் (ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள்), கொள்ளுப்பிட்டி அருள்மிகு கருமாரி அம்மன் கோவிலில் பத்மாவதி தாயார் சந்நிதி (சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்), யாதுமாகி நின்றாய் (சந்தனா நல்லலிங்கம்), ஆலய தத்துவ விளக்கம் (சிவஸ்ரீ குமாரசாமி குருக்கள்), அகத்தியமுனிவர் அருளிய மாதப் பதிகங்கள், கும்பாபிஷேக தத்துவம் (விஸ்வ நாராயண சர்மா), அகத்தியமுனிவர் அருளிய வாரப் பதிகங்கள், திருவிளக்கு பூஜையும் வழிபாடும் (துன்னையூர் ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்), திருவருள்மிகு அன்னை ஸ்ரீ தேவி கருமாரி அம்பாள் திரு ஊஞ்சல் பாமாலை (துன்னையூர் ராம். தேவலோகேஸ்வரக்குருக்கள்), மெய்யருள் தரும் ஸ்ரீ ஐயப்ப சுவாமி (துன்னையூர் ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்), ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி வழிபாடு (நயினை சுவாமிநாத பரமேஸ்வர குருக்கள்), ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஸ்ரீ ஐயப்பசுவாமி திருக்கோவில் அறங்காவலர்கள், ஆலயத்தில் நடைபெறும் வருட விழா நிகழ்வு உபயகாரர்கள், என்றும் இனிய நன்றியுடையோர் (ஆலய பிரதமகுரு ராம்.தேவலோகேஸ்வரக் குருக்கள்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34541).

ஏனைய பதிவுகள்

13034 மனிதரில் எத்தனை நிறங்கள்.

வைரமுத்து சிவராஜா. ஜேர்மனி: ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், Am Windhovel 18a, 47249 Duisburg47249, 1வது பதிப்பு, 2019. (ஜேர்மனி: அச்சக விபரம் தரப்படவில்லை).165 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

14554 ஜீவநதி ஆடி 2011: உளவியல் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 48

14402 நாட்டார் பாடல்கள்(தொகுப்பு).

சு. சுசீந்திரராசா, A. சண்முகதாஸ், M.A. நுஃமான், செ.வேலாயுதம்பிள்ளை. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1976. (ஹோமகம: கூட்டுறவு அச்சகம்). (6), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.