14143 தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய மாமணி சிறப்புமலர்-2002.

பொன்.புவனேந்திரன் (மலராசிரியர்). கனடா L5 B4 B4: செல்வச்சந்நிதி முருகன் ஆலய மாமணி நிர்மாண சபை, 2584இசுரபடில சுழயனஇ ழே.603இ ஆளைளளைளயரபயஇ ழுவெயசழைஇ 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (36), 109 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 27.5×21.5 சமீ. ஆசியுரைகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன்கூடிய இம்மலரில் செல்வச் சந்நிதி முருகப் பெருமான் கோவிலுக்கு கண்டாமணி மீள அமைத்தல் (வ.வேலும்மயிலும்), சந்நிதிச் செல்வமும் அமைவிடமும் (சந்நிதிச்செல்வம்), சந்நிதியின் மணி உருவாக்கம் ஒரு நோக்கு (கௌரி ஸ்ரீ ராகவன்), மின்னும் கதிர்வேல் கிருபைசூழ் சுடரே (திருமதி இந்திரா சிவயோகம்), தவத்திரு வே. முருகேசு சுவாமிகள் வரலாறு (சிவ.ஆறுமுகம்), செல்வச்சந்நிதி முருகப் பெருமானின் கண்டாமணி (து.பாலசுப்பிரமணியம்), பாவங்கள் போக்கும் கண்டாமணி (வல்வை ந.அனந்தராஜ்), ஸ்ரீ செல்வச் சந்நிதி வேலனே (சீ.விநாசித்தம்பி), முருக வழிபாட்டில் செல்வச் சந்நிதி ஓர் இலக்கிய நோக்கு (சாந்தனா நல்லலிங்கம்), சந்நிதி முருகனின் அருளும் ஆட்சியும் (துரைசாமி துரைரத்தினம்), ஆனிப் பொங்கலும் கடல் நீர் விளக்கும் (இந்திரா ஞான பண்டிதர்), செல்வச் சந்நிதி முறை (பொ.பூலோகசிங்கம்), Selva chchannithy Temple(S.Kulasingam) செல்வச் சந்நிதி முருகன் பேரில் அந்தாதி (சந்தனா நல்லலிங்க ஐயர்), சகல மார்க்க நிறைவான சரவணபவன் (காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்), வேல், சேவல், மயில் (கி.வா.ஜகந்நாதன்), தொண்டைமானாறும் இடப்பெயர் ஆய்வும் (வல்வை ந.நகுலசிகாமணி), தொண்டமானும் தொண்டைமானாறும் (செ.நாகலிங்கம்), செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி (வல்வை ச.வைத்திலிங்கபிள்ளை), குன்று தோறாடும் குமரன் (சாவையம்பதி இ.சுப்பிரமணியம்), சகவாசம் (செல்லத்துரை சுவாமிகள்), திருச் சந்நிதித் தோத்திரமாலை (வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை), செல்வச் சந்நிதி முருகன் 108 போற்றி மலர்கள் (திருமதி துரைரத்தினவதி இரவீந்திரன்), பன்னிரு கை வேலவன் சந்நிதியில் தனி வேல் அவன் (கனக மனோகரன்), முருகனருள் கிட்டும் முன்னே மணியோசை கேட்கும் பின்னே (சாமி அப்பாத்துரை), செல்வச் சந்நிதி சூழலில் சித்தர்களும் யோகியர்களும் (ஜீவகி பத்மராஜன்), பூக்காரர் (கைலைமணி வேல் சுவாமிநாதன்), செல்வச் சந்நிதிக் கந்தனின் கோயில் மணி ஓசை (சீ.விநாசித்தம்பி), சந்நிதியில் ஓங்கி நின்ற கோபுரமும், ஓங்கார மணி ஒலியும் (திருமதி அன்னலட்சுமி ஜெயபாபு), காந்த சக்தியுள்ள வேல் அவன் (வீ.ஆர். ராஜமோகன்), ஈழத்தின் தொன்மை வாய்ந்த இந்து மதத்தில் வேல் வழிபாடு (சி.க.சிற்றம்பலம்), செல்வச் சந்நிதி ஆலயம் (செ.வீரகுலசிங்கம்), ஓமானில் சந்நிதி முருகன் திருவிழா (க.இரவீந்திரன்), செல்வச் சந்நிதி முருகனின் அற்புதக் காட்சி (செல்வி பூர்ணிமா அழகேந்திரன்), குறிஞ்சிக் குமரன் (சரோஜினி நல்லந்துவன்), கந்த சஷ்டி கவசம், செல்வச் சந்நிதி முருகன் பாடல்கள் (சிவ. ஆறுமுகம்), முருகன் துதிப் பாடல்கள், வேலன் மணிக்குரல் வெல்லும் (காசி ஆனந்தன்), Bell Founders ,Selvachchanithy Temple Bell construction donation from devotees ,செல்வச் சந்நிதி கோயில் மாமணி நிர்மாண சபை ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 27425).

ஏனைய பதிவுகள்

14405 கொடகே சதர்த்தவாஹினீ வாணி கற்பகம் ஆங்கில-தமிழ் அகராதி.

வஜிர பிரபாத் விஜயசிங்க. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,665,675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-1792 பக்கம்,

12595 – உயர் தர மாணவர் பௌதிகம் : ஒளியியல் .

அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235, காங்கேசன்துறைச் சாலை, 2வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி ஒழுங்கை). (4), 224 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

12563 – தமிழ் மலர்: ஏழாம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1966. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (4), viii, 295 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.80,

12559 – தமிழ் எழுத்துப் பயிற்சி (Practice in Tamil Writing).

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே.யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). x, 38 பக்கம், விலை: ரூபா 100.,

14794 மர்ம மாளிகை.

அருள் செல்வநாயகம். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி 160, 1வது பதிப்பு, ஜுன் 1973. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). (4), 243 பக்கம், விலை: ரூபா 2.90,

14625 நிலா நாழிகை.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). வேலணை: பாலசுந்தரம் ரஜிந்தன், 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). 110 பக்கம்,