14145 நல்லை குமரன் மலர் 1998.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (12), 108 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 6ஆவது மலராக 1998 ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின் போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. பல்வேறு பிரமுகர்களின் வாழ்த்துக்களுடனும், ஆசிச்செய்திகளுடனும், தெய்வம் நமக்குத் துணை (இ.தெய்வேந்திரன்), சொல்லாய் முருகா நல்லைக்குமரா (நா.சு.சண்முகநாதபிள்ளை), திருமுருகன் திருநாமச் சிறப்புக் கண்ணிகள் (ச.தங்கமாமயிலோன்), நல்லைத் தேர்ப் புகழ் (அராலி பரமேஸ்வர சர்மா), நல்லூர் நாயகன் நாமாவளி (த.ஜெயசீலன்), நல்லூர்க் கந்தசுவாமியார் திருவூஞ்சற்பதிகம், முருகன் – அழகுத்தெய்வம் (வி.சிவசாமி), யாழ்ப்பாண முற்றவெளி: சில நினைவுக் குறிப்புகள் (க.குணராசா), யார்க்கெடுத்துரைப்பேன்? (ஆறு. திருமுருகன்), திருக்குமாரர் அவதாரம் (மட்டுவில் ஆ.நடராசா), சித்தாந்தச் சிவநெறி (செ.மதுசூதனன்), தேரின் தத்துவமும் நல்லூ ரான் தேரடி மகத்துவமும் (க.சொக்கலிங்கம்), ஆத்ம ஞானமளிக்கும் ஞானபண்டிதன் (கா.கணேசதாசன்), வேலே விளங்கு கையன் தாளே சரண் நமக்கு (வாசுகி சிவராமலிங்கம்), சிதம்பரம் (பொ.சிவப்பிரகாசம்), ஈழத்தின் தமிழர் மத – பண்பாட்டு விளக்கத்துக்கு (கார்த்திகேசு சிவத்தம்பி), பகவத்கீதை கூறும் தத்துவக் கருத்துக்கள் (சின்னத்தம்பி பத்மராஜா), முருக மந்திரம்-கந்தர் அநுபூதி (சிவ.மகாலிங்கம்), சுவாமி வினேகானந்தரின் சமூகவியற் சித்தாந்தம் (இ.ராஜாமகேந்திரசிங்கம்), ஆன்ம ஈடேற்றத்திற்கு அபரக் கிரிகைகளின் அவசியம் (கரணவாய் கை. திருஞானசம்பந்தக் குருக்கள்), நடராஜ வடிவமும் தத்துவமும(காரை செ.சுந்தரம்பிள்ளை), உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த கொடிக்கவி, நாதமணி கேட்கையிலே (நல்லைக் குகன்), உய்வினைத் தந்த தமிழினம் காப்பாய் நல்லூரானே (பொன். தன.சிவபாலன்), நல்லூரில் கோட்டை அமைத்த வேலவனே அருள் வள்ளலென்று ஓடி வந்தோம் (மீசாலையூர் கமலா), சிவப்பணி செய்த சிவதர்ம வள்ளலுக்கு (சைவசமய விவகாரக்குழு) ஆகிய படைப்பாக்கங்களுடனும் இம்மலர் வெளிவந்துள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10662).

ஏனைய பதிவுகள்