நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (6), 137 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 7ஆவது மலராக 1999 ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் நா.க.சண்முகநாதபிள்ளை, தங்கமாமயிலோன், த.ஜெயசீலன், எஸ்.இராஜேந்திரா, நல்லைக்குகன் ஆகியோரின் கவிதைகளும், அழிவைத் தடுக்கும் இறைசிந்தனை (இ.தெய்வேந்திரன்), பொது வரவேற்பும் பட்டமளிப்பும் (இரா.இரட்ணசிங்கம்), யாழ்ப்பாணத்துச் சைவக் கோயில் (அ.சண்முகதாஸ்), திருவாரூர் (பொ.சிவப்பிரகாசம்), நல்லூர் அன்றும் இன்றும் (வி.சிவசாமி), ஏல் ஓர் எம்பாவாய் (மனோன்மணி சண்முகதாஸ்), பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் நல்லூர்கள் (பரராஜசிங்கம் கணேசலிங்கம்), பழையரிற் பழையனாம் பரமன் சிறுவன் (க.சொக்கன்), சைவாலய வழிபாட்டு மரபில் சிவாச்சாரியார் மகத்துவம் நிலைபெற (கலைவாணி இராமநாதன்), வள்ளி மணாளன் (சற்சொரூபவதி), திருமுறைகளில் கிரியைகள் பற்றிய சில சிந்தனைகள் ஸ்ரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா), பேதமில்லா இனிய நெறியே சைவம் (கா.கணேசதாசன்), மேன்மைகொள் சைவநீதி (செ.மதுசூதனன்), முருக வழிபாடும் அருணகிரிநாதரும் (விக்னேஸ்வரி சிவசம்பு), சண்டேசுவரர் வழிபாடு (ப.கோபாலகிருஷ்ணஐயர்), சிறப்புமிகு சைவசித்தாந்தம் (மட்டுவில் ஆ.நடராசா), சமய வாழ்வு (சுகந்தினி முரளிதரன்), மனிதப் பிறவியின் மாண்பு (மு.திருநாவுக்கரசு), வல்வினையின் வேர் தடிய (யோகேஸ்வரி சிவப்பிரகாசம்), முருகன் பெருமை (காரை சிவராஜசர்மா), இளைஞர் வாழும் வழி (தெல்லியூர் செ.நடராஜா), நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் (மாலினி வேதநாதன்), நல்லூர்க் கந்தன் கலிவெண்பா, நல்லூர் முருகன் திருப்புகழ், கற்றதனாலாய பயன் (இ.மா.சிவசுப்பிரமணியம்), எட்டுக்குடியேசல் ஆகிய படைப்பாக்கங்களும் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் னு 1432).