நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). x, 104 + (22) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 10ஆவது மலராக 2002 ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. வாழ்த்துச் செய்திகள் மற்றும் ஆசிச்செய்திகளுடன் மேலதிகமாக நல்லைக்கந்தன் தேர் உலாப்பாடல் (நா.க.சண்முகநாதபிள்ளை), திருநல்லைக் கந்தன் தோத்திரம் (சீ.வினாசித்தம்பி), பன்னிரு திருமுறைச் சிந்தனைக் கண்ணிகள் (தங்கமாமயிலோன்), வேறு துணையற்ற விருத்தம் (த.ஜெயசீலன்), இந்த மண்ணில் வாழ அருள் நல்லூரானே (வே.த.இரத்தினசிங்கம்), நல்லைக்குமரன் (பூ.புலேந்திரராஜா), ஒன்பதொடொன்று (கனகசபாபதி நாகேஸ்வரன்), பாடும் பணியே பணியா அருள்வாய் (சீ.விநாசித்தம்பி), திருக்கோயில்கள் (சி.க.சிற்றம்பலம்), பேறுகளைத் தந்திடுவான் பேரின்பம் பெற்றிடுவீர் (வ.யோகானந்தசிவம்), திருமுறை ஓதலில் பெரியபுராணம் (கலைவாணி இராமநாதன்), விளக்கிட்டார் பேறு (இரா.கோபாலகிருஷ்ணன்), நல்லைக் குமரன் பாமாலை (இராசையா குகதாசன்), தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள்: ஒரு நோக்கு (சுமதி கனகரட்ணம்), பவவினையது தீரருள் தாராய் (இராசையா குகதாசன்), பழந்தமிழ் நூல்களில் முருக வழிபாட்டுச் சிறப்பு (நீர்வை மணி), குமாராய நம (கோ.சி.வேலாயுதன்), பிறவா முருகன் (க.சிவசங்கரநாதன்), பாடும் பணியே பணி (செ.கந்தசத்தியதாசன்), சிவமணப்பொடி பரப்பிய திருப்புகலி கவுணியப் புலவன் (நயினை ஆ.தியாகராசா), சிலப்பதிகாரத்தில் முருகன் (வி.சிவசாமி), திருவாலங்காடு (பொ.சிவப்பிரகாசம்), பெரியபுராணத்தில் முருகவேள் (சிவசண்முகவடிவேல்), மந்திரங்களின் மகிமை (காரை கு. சிவராஜசர்மா), முருகனும் மலையும் (அ.சண்முகதாஸ்), ஓங்காரம் (நாச்சியார் செல்வநாயகம்), தூயவாழ்வும் அமைதியும்தர குருநாதா அருள்தருவாய் (தங்கமுகுந்தன்) ஆகிய படைப்பாக்கங்களும் இம்மலரை அழகுபடுத்தியுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12108).
Aşchie Casino 2024 Până la 5 000 RON și 1.000 Rotiri Gratuite
Content ROTIRI GRATUITE Ci Vărsare În BIG BASS BONANZA | million dollar man $ 1 Depozit Bonus să 100% Până de 1000 RON Ştocfiş Bonus