நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). ஒii, 160+ (54) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமநல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 13ஆவது மலராக 2005 ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் அருட்கவி.சீ.விநாசித்தம்பி, விகடகவி.மு.திருநாவுக்கரசு, சீனாச்சனா, பொன். தெய்வேந்திரன், த.ஜெயசீலன், சி.இராஜேந்திரா, நாக.சண்முகநாதபிள்ளை, தாட்சாயணி, வ.யோகானந்தசிவம், சிவனேஸ்வரி பாலகிருஷ்ணன் ஆகியோரின் இனிய தமிழ்க் கவிதைகளும், இந்து சமயத்தில் முருக வழிபாடு (சிவ. மகாலிங்கம்), அப்பர் அடிச்சுவட்டைப் பின்பற்றின் ஈழத்தமிழர் ஈடேற்றம் உறுதி (மா.க. ஈழவேந்தன்), உளமாரப் பணிந்தோமே வளமான வாழ்வு தாராய் (இராசையா ஸ்ரீதரன்), ஸ்ரீ முருக விரதங்கள் (கா.கணேசநாதன்), அருணகிரிநாதர் போற்றும் அழகன் (க.அருமைநாயகம்), ஆலய வழிபாடும் சுயநலமற்ற சமய சமூகத் தொண்டுகளும் (சி.சி.வரதராசா), தமிழ் மொழியில் வழிபாடு (சி.பொன்னம்பலவாணர்), உலகு (இராம ஜெயபாலன்), அறம் வெல்லும் (கு.சிவநந்தினி), கும்பியடிப்போம் (கிருஸ்ணசாமி துர்க்காம்பிகை), மாநகரசபையின் சமயப் பணியில் சொக்கனின் பங்கு (இ.இரத்தினசிங்கம்), யாழ்ப்பாணத்து நல்லூர் வேலின் சிறப்பு (வை.சி.சிவசுப்பிரமணியம்), மன்று(ள்)ளார் அடியார் (வ.கோவிந்தபிள்ளை), ஆண்டவனைப் பற்றினால் ஆனந்தமே (செ.பரமநாதன்), நால்வர் காட்டிய வழி (து.இராஜன்), அழகனைக் காண நாலாயிரம் கண், பழனி மலை முதல் சுவாமி மலை வரை (எஸ்.நடராசா), ஆலயங்களில் அமைதி பேணுவோம் (இ.இரத்தினசிங்கம்), திருநெல்வேலி (பொ.சிவப்பிரகாசம்), நான் யார்? (யோகர் சுவாமி), பண்டைத் தமிழரிடையே நிலவிய நீர் வழிபாட்டு மரபுகள் (ஆர்.எஸ்.சந்திரசேகர்), பதினெண் மேற்கணக்கு இலக்கியங்களில் முருக வழிபாடு (ச.முகுந்தன்), நல்லைக் குமரன் மலரின் இவ்வாண்டு கௌரவம் பெறும் மாவையாதீனகர்த்தா மஹாராஜ ஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள், யாழ் மாநகர ஆலயங்கள் (இ.இரத்தினசிங்கம்), நல்லூர் இராசதானியின் வரலாற்று ஆலயங்கள் (கலைவாணி இராமநாதன்), புலநரிச் சிவன் கோவில்கள் (வெள்ளவத்தை ஸ்ரீ குல.சபாநாதன்), நல்லூர் இராசதானி (க.குணராசா), அருள் வேண்டினோம் (இராசையா ஸ்ரீதரன்), ஈழத்துத் திருப்புகழ் – ஒரு குறிப்புரை (வி.சிவசாமி), சுப்பிரமணிய பராக்கிரமம் (மனோன்மணி சண்முகதாஸ்), முருக வழிபாட்டில் மரபுகளும் சம்பிரதாயங்களும் (மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்), நல்லூர் முருகன் அலங்காரச் சித்திரத்தேர் – அமைப்பும் வரலாறும் (வேலுப்பிள்ளை அம்பிகைபாகன்), முருகன் திருவருளை நிலைநாட்டிக் கந்தசஷ்டி நோற்கும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் பக்தி மேம்பாடு (கனகசபாபதி நாகேஸ்வரன்), இந்திய நாட்டுத் தமிழகக் கொடைக் கானலில் சேர் பொன் இராமநாதன் அமைத்த குறிஞ்சி ஆண்டவர் கோயில் (ப.கணேசலிங்கம்), நல்லூர்க் கந்தசுவாமி உற்சவங்கள் (வை.ஜெகதீஸ்வர சர்மா) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13313).
Blackjackpro reddit better online casino Montecarlo Singlehand Condition: Review and hexenkessel casino you will More Laws
So it operates to the newest player’s downside because the a lot more notes will be dealt in the event the shuffle section is actually