14151 நல்லைக்குமரன் மலர் 2008.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 204 + (38) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ. நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 16ஆவது மலராக 2008 ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் ச.தங்கமாமயிலோன், கவிஞர் வ.யோகானந்தசிவம், செ.பரமநாதன், த.ஜெயசீலன், கோ.சி.வேலாயுதம், வி.சிவசாமி ஆகியோரின் பாமாலைகளும், கிரிசாம்பாள் கிருஸ்ணசாமி, கி.துர்க்காம்பிகை, ச.கனகரெத்தினம், த.தயாபரன், இராசையா ஸ்ரீதரன், வ.சின்னப்பா, வதிரியூர் கண.எதிர்வீரசிங்கம், காரை.எம்.பி.அருளானந்தன், கு.துரைராஜன், மு.க.சிவானந்தம், சந்திரவதனி தவராஜா, பா.பாலச்சந்திரன், குளப்பிட்டி க.அருமைநாயகம், அல்வாயூர்.சி.சிவநேசன், வை.க.சிற்றம்பலம், சிவசிதம்பரம் திருநாவுக்கரசு ஆகியோரின் கவிதைகளும் சிவகுமாரர் சிவபெருமானது பிரதி விம்பங்களா? (மட்டுவில் ஆ.நடராசா), முருக உற்பவம் பற்றி ஓர் ஆய்வு (கே.எஸ்.ஆனந்தன்), இழையணி சிறப்பிற் பழையோள் குழவி (செல்வஅம்பிகை நடராஜா), குகையில் பிரார்த்தனை ஜனித்தது திருமுருகாற்றுப்படை (க.ஈஸ்வரன்), ஐந்தவித்தான் ஆற்றல் (யோகேஸ்வரன் அஜித்), பரம்பொருளும் பிரபஞ்ச இயக்கமும் ஊழிக்கால அழிவும் (கணேசன் சைவசிகாமணி), சைவ ஆலயங்களின் அமைப்பு (ஏ.எஸ்.ஞானம்), சைவாலய பரிபாலனங்கள் – சில சிந்தனைகள் (கா.சிவபாலன்), நூற்பாத சைவம் (ஆ.சபாரத்தினம்), சண்டேஸ்வரர் போலச் சண்டேஸ்வரியும் உண்டா? சிவாகமங்களும் பெரியபுராணமும் கூறும் விளக்கம் (ப.சிவானந்தசர்மா), மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் (மனோன்மணி சண்முகதாஸ்), ஆண்டாள் பக்தி அனுபவம் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), வைதிக இலக்கியங்கள் புலப்படுத்துகின்ற சில விழுமியச் சிந்தனைகள் (ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்த சர்மா), தெய்வ வாசகமாகிய திருவாசகம் (சிவ.மகாலிங்கம்), சைவசமயத்தின் விஞ்ஞானப் பார்வை (பா.பிரசாந்தனன்), திருநெறிய தமிழ் பாராயண மரபு (சி.கிருஷ்ணமூர்த்தி), ஆலயங்கள் அறப்பணிகளை ஆற்றுமா? (இ.இரத்தினசிங்கம்), இறைவனைக் காட்டலாமா? காணலாமா? (மலர் சின்னையா), திருச்செந்தூர்ப் புராணமும் வேல் வழிபாடும் (வ.கோவிந்தபிள்ளை), ஸ்கந்தோற்சவ விளக்கங்கள் குமார தந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பொது நோக்கு (மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசாநாத சர்மா), கொடியேற்ற விழாவின் சைவசித்தாந்தப் பொருண்மை (பொ.சந்திரசேகரம்), சிவபாதசுந்தரனார் நோக்கில் ஆணவம் (ஹேமமாலினி கணபதிப்பிள்ளை), நல்லூர் இராசதானி காலத்தில் ‘கந்தன், ஆறுமுகன்” பெயர்களில் வெளியிட்ட நாணயங்கள் (ப.புஷ்பரட்ணம்), முருக வழிபாடும் யாழ்ப்பாண சித்த மருத்துவமும் பற்றிய இலக்கிய ஆய்வு (அ.ஸ்ரீதரன்), பக்தி இயக்கமும் சமுதாய மறுமலர்ச்சியும் (கலைவாணி இராமநாதன்), இந்து சமயமும் மனிதநேயமும் (விக்னேஸ்வரி பவநேசன்), பெரியபுராணம் கூறும் தமிழர் வாழ்வியல் நெறி (வை.சி.சிவசுப்பிர மணியம்), பஞ்ச கன்னிகைகள்: ஓர் பார்வை (மீனலோசினி பாரதி), இராமேஸ்வரம் (பொ.சிவப்பிரகாசம்), 2008 இல் ‘யாழ் விருது” பெறும் வைத்தியகலாநிதி திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி (சைவசமய விவகாரக் குழு), நாவலர் கலைத் தொண்டின் காவலன் இந்துபோட் இராசரத்தினம் (க.பேரம்பலம்), சிவத்தமிழ் அன்னையின் திருவடிகள் தொழுகின்றோம் (ந.விஜயசுந்தரம்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15624).

ஏனைய பதிவுகள்

jakie kasyno internetowe

Игровые автоматы онлайн казино Реальные онлайн казино Jakie kasyno internetowe Większość kasyn w dzisiejszych czasach oferuje osobną sekcję zwaną zwykle „kasyno na żywo”. Możemy w

Tragaperras En internet Regalado

Content Ranura evolution – Preguntas Asiduos De Juegos De Casino Así­ como Tragaperras Regalado Tragamonedas Progresivas Casi nada una diferente tragamonedas con bote deberían pagado