நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xii, 172 + (48) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 17ஆவது மலராக 2009 நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் தினமும் குமரன் திருநாமங்கள் செப்பிடுவோர்க்குச் சேரும் புண்ணியம் (வ.யோகானந்தசிவம்), தேடுமெம்முன் வந்து சிரி (த.ஜெயசீலன்), திருவருளே குருவடிவாம் திறம் (ஆனந்தி ஜெயரட்ணம்), பள்ளி எழுந்தருளாயே (மலர் சின்னையா), கூறுமடியார் குறை தீர்க்கும் குமரன் (இராசையா ஸ்ரீதரன்), உளமறிந்து இரங்காதும் இருப்பதேனோ (வதிரி கண. எதிர்வீரசிங்கம்), நல்லைச் சண்முகமாலையும் நல்லைத் திருவருக்கமாலையும் (கனகசபாபதி நாகேஸ்வரன்), கந்தன் திருப்பாத மகிமை (சண்முகயோகினி ரவீந்திரன்), திருமுருகாற்றுப்படையில் முருக வழிபாடு (ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா), சிலப்பதிகாரத்தில் முருக வழிபாடு (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), கௌமார வழிபாட்டு மரபில் முருகக் கடவுளின் வடிவங்களும், நாமங்களும் (மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா), முத்தமிழையும் சுவைத்த ஞானபண்டிதன் (மூ.சிவலிங்கம்), சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி (வை.சி.சிவசுப்பிரமணியம்), திருப்புகழ் காட்டும் பெண்மை (மனோன்மணி சண்முகதாஸ்), சேயெனைக் காப்பாய் முருகா (சந்திரவதனி தவராசா), மூவர் தமிழ் (சிவ.மகாலிங்கம்), புறநானூறு கூறும் வைதிக சைவம் (மட்டுவில் ஆ.நடராசா), வைதிக தத்துவ நோக்கில் மனம் (க.திலகவதி), இராமாயணம் காட்டும் சிவவழிபாடு (ந.ஜெயபாரதி), வேலனிடம் வேண்டிடுவோம் (குளப்பிட்டி க.அருமைநாயகம்), இந்து திருமணச் சடங்குகள் வெளிப்படுத்தும் வாழ்வியற் பண்பாடு (கலைவாணி இராமநாதன்), இடர்கள் நீக்கும் கந்தன் வேல் (மீசாலையூர் கமலா), திருவாதவூரர் புராணம் – ஒரு சிறு ஆய்வு (வ.கோவிந்தபிள்ளை), தேரேறி வருகின்றான் திருக்குமரன் (கீழ்கரவை கி.குலசேகரன்), திருவருட்பயன்: பண்டிதமணி உரைச் சுருக்கம் (ச.தங்கமாமயிலோன்), தேர் – ஒரு வரலாற்று நோக்கு (வி.சிவசாமி), அஞ்சேல் என்றபயம் தாராய் (இந்திரா திருநீலகண்டன்), இந்துப் பண்பாட்டுச் சிந்தனைகளை உலக அரங்கில் பரப்பிய ஈழத்து இந்து சமயப் பெரியார்கள் (ப.கணேசலிங்கம்), சிங்கார வேலா வருவாய் (கிருஷ்ணசாமி கிரிசாம்பாள்), தேரடியில் தேர்ந்த சித்தர்கள் (மயில்வாகனம் சிவயோகசுந்தரம்), வடிவும் வண்ணமும் (செல்வஅம்பிகை நடராஜா), தாயுமானவர் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), விழுதெனத் தாங்குவாய் (அல்வாயூர் சி.சிவநேசன்), ஆலயந் தொழுவது சாலவும் நன்று பூசனை புரிவது போற்றுதற்குரியது (செ.மதுசூதனன்), மருத்துவத்தில் முருகன் – இலக்கிய ஆய்வு (க.ஸ்ரீதரன்), இசைக் கலையும் இந்துசமயக் கோயில்களும் (பா.பிரசாந்தனன்), தமிழகத்தில் உள்ள இந்துக் கோயில்களும் சிற்பக்கலை வளர்ச்சியும் (செ.பரமநாதன்), ஆன்மீக வாழ்க்கை – சில கருத்துக்கள் (க. சிவலிங்கம்), தர்மத்தை நிலைநாட்டும் அவதார புருஷர்கள் (கணேசன் சைவசிகாமணி), காவிரி நாயகன் (சிவ.வை.நித்தியானந்த சர்மா), செழுமை மிகுந்த பழமைகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டுவோம் (இ.இரத்தினசிங்கம்), பொருள் போகுனிடம் புண்ணிதமே (து.சோமசுந்தரம்), 2009 இல் யாழ் விருதினைப் பெறும் யாழ் மாவட்ட அதிபர் உயர்திரு. கே.கணேஷ் அவர்கள் (இ.இரத்தினசிங்கம்) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16152).
ten Better Cellular Gambling enterprises and you can Software for real Money Online game alaskan fishing slot free spins 2025
Posts Do you know the best casinos to have online slots games in the Philippines? – alaskan fishing slot free spins Secure Video clips Ports