14153 நல்லைக்குமரன் மலர் 2011.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2டB, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). ஒ, 176 + (56) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ. நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 19ஆவது மலராக 2011 ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் நல்லையம்பதியானைப் பணிவோம் (ச.தங்கமாமயிலோன்), வேலை வணங்குவதே வேலை (ச.வாசுகி), நல்லைக்குமரன் நற்றமிழ் வெண்பாமாலை (வ.சின்னப் நின்முன்னே நீறிற்றென் நான் (த.ஜெயசீலன்), கந்தனுக்கு உகந்த ஆறு (வ.யோகானந்தசிவம்), நல்லைநகர் பதியாளும் நாயகனே (வதிரி கண. எதிர்வீரசிங்கம்), நல்லைக் குமரன் பாமாலை (இராசையா ஸ்ரீதரன்), நல்லூரும் மத்தியகால திராவிடர் மரபுகளும் (செல்லையா கிருஷ்ணராசா), நல்லைக்குமரன் மலர்வாழி (சு.குகதேவன்), கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த ஆலய அழிபாடுகள் நல்லூர்க் கந்தனுக்கு உரியதா? (ப.புஷ்பரட்ணம்), யாழ்ப்பாண மாநகரசபைப் பிரதேசத்து சைவக் கோயில்கள் (ப.கணேசலிங்கம்), உன்னருளைத் தாரும் ஐயா (இராம. ஜெயபாலன்), சிற்றடி (அ.சண்முகதாஸ்), அலங்காரக் கந்தனென அமர்ந்தாயே நல்லையிலே (நாயன்மார்கட்டு ப. மகேந்திரதாசன்), வையைக் கரையில் ஒரு வாழ்வியல் (மனோன்மணி சண்முகதாஸ்), சங்க இலக்கியங்களில் காணப்படும் சமய நம்பிக்கைகள்: நற்றிணையை அடிப்படையாகக் கொண்டவை (கலைவாணி இராமநாதன்), திருமுறைகளில் வாழ்வியல் (சிவ.மகாலிங்கம்), கார்த்திகைக் குமரா வருவாய் போற்றி (மீசாலையூர் கமலா), கந்தபுராணம் – ஒரு நீதிநூற் கருவூலம் (2) (வ.கோவிந்தபிள்ளை), பெரியபுராணம் தந்த சேக்கிழார் சுவாமிகள் (பொ.சிவப்பிரகாசம்), இறைவன் ஒரு மாபெரும் சக்தி (து.ஷ இரத்தின சபாபதிக் குருக்கள்), பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை (வி. சிவசாமி), அஞ்ஞான இருளகற்றும் மெய்ஞ்ஞான வேல் (நா. சிவசங்கர்சர்மா), கோபுரதர்சனம்: ஸ்ரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா, இறைபணி நிற்றலும் பக்தி வைராக்கியமும் (வை.சி.சிவசுப்பிரமணியம்), பன்னிரண்டாம் திருமுறையில் சில கருத்துக்கள் (தி.பொன்னம்பவாணர்), சுப்பிரமண்ய ஆலய நிர்மாண விதி குமாரதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு. (பாலகைலாசநாத சர்மா), கதிரவனும் தெய்வத் தமிழும் (இ. இரத்தினசிங்கம்), கோயிலும் நடனக்கலையும் (தயாளினி செந்தில்நாதன்), ஜெயதேவரின் கீதகோவிந்தத்தில் ராதா – மாதவ பண்பாடு (ஸ்ரீகலா ஜெகநாதன்), கதிர்காம மகிமையைக் கனவிலே காட்டினார் (மதிவாணர் செ.மதுசூதனன்), நல்லூரில் வாழ்ந்த ஞானியர் இருவர் (சின்னத்தம்பி பத்மராசா), யாழ்ப்பாணத்து ஆலயங்கள் ஆற்றக்கூடிய பணிகள் சோழர்கால ஆலயங்களை அடிப்படையாகக் கொண்ட பார்வை (சாந்தினி அருளானந்தம்), இந்து சமயத்தில் மனிதாபிமானப் பண்புகள் (பா.பிரசாந்தனன்), ஆண்டவனைக் காண ஆசைப்படுமனமே (சிவனேஸ்வரி பாலகிருஷ்ணன்), அன்னை பராசக்தி அவதாரங்களில் லக்ஷ்மி-அலக்ஷ்மி (கணேசன் சைவசிகாமணி), நிம்மதி தருவாய் நம்மவர்க்கு (குளம்பிட்டி க.அருமைநாயகம்), ஈழத்துச் சித்தர் மரபில் இணுவில் பெரிய சந்நியாசியார் (இணுவையூர் மூ.சிவலிங்கம்), 2011 இல் யாழ். விருதினைப் பெறும் புற்றுநோயியல் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ந. ஜெயகுமாரன் அவர்கள் (இ. இரத்தினசிங்கம்), தேருதல் அளிப்பாய் முருகா (சு.நடனேஸ்வரி) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 011617).

ஏனைய பதிவுகள்

Razor Shark Slot Kostenlos Online Aufführen

Content Orangefarbener Hai Unser Spielweise Solch ein Spannenden Digitalen Slots Top Casinos 2023 Zahlungssymbole Inside Razor Shark Runde Qua Hoher Gewinnrate Razor Shark Die Spielmechanik

Fsnd and Jack Mobile Casinos Unify

Articles Exactly what Casino games Can i Have fun with A gambling establishment App? Latest Americas Cardroom Promo Password Offers And you may Extra Advertisements