14154 நல்லைக்குமரன் மலர் 2017.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xiஎ, 264+ (40) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18 சமீ. நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர். 25ஆவது மலராக 2017 ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் நல்லைநகர்க் கந்தர் பேரிற் பாடிய திருவூஞ்சல், நல்லூர்க் கந்தர் கலிவெண்பா, திருநல்லூர்க் குயிற்பத்து (சங்கரத்தையூர் சி.சபாநாதன்), நல்லூர் முருகன் நற்றமிழ்க் கீர்த்தனை (இராசையா ஸ்ரீதரன்), தீரம்கொண்டு வேலேந்தி வா (கை.பேரின்பநாயகம்), ஞானபலம் (த.ஜெயசீலன்), நல்லைக்கந்த சந்தப்பா (நவ.பாலகோபால்), நல்லைக் குருபரனை நம்பினேன் சரண் புகுந்தேன் (சின்னையா சிவபாலன்), வேலவனே குறை களைவாய் (கி.குலசேகரன்), தேரேறி நல்லருள் தருவாய் நல்லூரா (நா.கீதாகிருஷ்ணன்), ஓறாறு முகனே (கே.ஆர். திருத்துவராஜா), பாதத்தின் நிழல் தா (சிவ.சிவநேசன்), சுபீட்சம் நிலைத்திட வைப்பவனே (கண.கிருஷ்ணராஜன்), நல்லை நகரில் கோட்டை அமைத்த கந்தா உனக்கு வாடாத மாலைகள் (மீசாலையூர் கமலா), எமையாட்கொள்வாயே (கண. எதிர்வீரசிங்கம்), வெள்ளிவிழா மலருக்குத் தருகின்றோம் (க.அருமைநாயகம்), நல்லைநகர் வாழும் குமரேசா (க.சின்னராஜன்), வினைப்பலன்கள் தரும் அரன் தரணியொடு தராபதி போல (இ.ஜெயந்திரன்), அல்லல் போக்கி அடியவர்க்கு அருள்புரியும் ஆறுமுகப் பெருமான் (நீர்வை மணி), வேலவனும் வேலாயுதங்களும் பொதுப் பார்வை (ம.பாலகைலாசநாத சர்மா), குருவாய் வருவாய் அருள்வாய் குகனே (வை.பாலகிருஷ்ணன்), ஓம் சரவணபவ முருகா (இ.சரவணபவன்), கதிர்காம முருகன்: தொன்மையும் அடையாளமும் (நா.சண்முகலிங்கன்), யாழ்ப்பாணாயன் பட்டினமருவிய திருமால் மருகோன், திருமுருகனின் சாந்நித்தியமும் சந்நிதி முறையும் (தி.மனோஷன்), கந்தபுராணம் கூறும் முருகனதுமகிமைகள் (ஆ.சசிநாத்), பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் (கே.தவசீலன்), கந்தரந்தாதி (அ.சிற்சபேசலிங்கம்), தொல்கதிக்கு வழிகாட்டும் கந்தர் அநுபூதி (கந்த.தியாகராஜா), உபநிடதத்தில் ஒரு தத்துவப் பார்வை (ஆரணி விஜயகுமார்), சைவ வைஷ்ணவ பேதங்கள் (கந்த.ஜெயராமக் குருக்கள்), பல்லவர் காலத்தில் சித்தர்களும் சித்தாந்த மரபும் (கலைவாணி இராமநாதன்), நாகபடுவானில் நாக இனக்குழுவின் தொடக்ககால வழிபாட்டுமையம் (ப.புஷ்பரட்ணம்), விஜயநகரப் பேரரசும் இந்து சமயமும் (சாந்தினி அருளானந்தம்), அறவியல் நோக்கில் திருமந்திரமும் திருக்குறளும் (சிவ.மகாலிங்கம்), புராணங்கள் (பொ.சிவப்பிரகாசம்), குமாரசுவாமிக் குருக்களின் முப்பொருள் விளக்கம் (ச.பத்மநாதன்), சும்மா இரு சொல் அற (தியாக. மயூரகிரிக் குருக்கள்), பண்டைத் தமிழர் வாழ்வியலில் தேன் (மனோன்மணி சண்முகதாஸ்), பிள்ளைத்தமிழ் (செ.பரமநாதன்), ஈழத்துச் சித்தர் யோக சுவாமிகளின் வரலாறும் பணிகளும் (இ.தனஞ்சயன்), ஆறுமுகநாவலரின் புனிதப் பணிக்கு பெருமை சேர்ப்பது அவரின் வழிநின்றுழைத்தல் (ஸ்ரீநதிபரன்), பக்தி வைராக்கியமும் சமூக அக்கறையும் மூவர் வாழ்வியலூடாக புலப்படும் விதம் (கு.கஜனா), பக்தி வைராக்கியத்தின் மூலம் மாணிக்கவாசகரின் பக்திநிலை (சரோஜினிதேவி சிவஞானம்), சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் ஈழத்து சைவ மரபில் ஏற்படுத்திய தாக்கம்-ஓர் ஆய்வு (தி.செல்வமனோகரன்), சித்தர்கள் வரிசையில் காரைக்கால் அம்பலவாணர் சுவாமிகள் (மு.சிவலிங்கம்), வளமுடன் வாழ வழிகாட்டும் விநாயகர் (நயினை எஸ்.சோமேஸ்வரபிள்ளை), நடராஜர் நடனத்தின் தாற்பரியம் (சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்), தாய்த் தெய்வ வழிபாடு (பத்மராசா பத்மநிருபன்), நன்னெறி நின்றி என்னில் (வ.கோவிந்தபிள்ளை), குறள் காட்டும் வழி (சு.சிவராசா), விருந்தோம்பலின் சிறப்பு (சுவாமிநாதபிள்ளை தேவமனோகரன்), சரித்திர விசித்திரம் படைக்கும் சைவ பரிபாலன சபை (வை.இரகுநாத முதலியார்), சீனாவின் கண் மருத்துவம் மற்றும் கண் அறுவைச் சிகிச்சைக்கு பண்டைய ஆயுள்வேதப் பனுவல்களின் பங்களிப்பு (புவிலோகசிங்கம் அருள்நேசன்), 2017இல் யாழ் விருது பெறும் கலாநிதி ஆறு திருமுருகன் (பு.ஆறுமுகதாசன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24804).

ஏனைய பதிவுகள்

The brand new Online slots

Articles Preferred Slots In the united kingdom Demo Position: Main Games Position Online Gratis Tanpa Put Play The newest Ports For free Demonstration Position On

12814 – மெல்லச் சாகும் வாலிபம் (சிறுகதைகள்).

நற்பிட்டிமுனை பளீல் (இயற்பெயர்: ஆதம்லெப்பை முஹம்மது பளீல்). கல்முனை: A.L.M. பளீல், நற்பிட்டிமுனை-1, 1வது பதிப்பு, 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: ரூபா 55., அளவு: 20 x 14

14280 வாழத் துடிக்கும் வன்னி: சமூகவியல் கட்டுரைகள்.

பொன்னையா மாணிக்கவாசகம். வவுனியா: தனேத்ரா வெளியீட்டகம், 7/3, 10ஆம் ஒழுங்கை, வைரவபுளியங்குளம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோவில் வீதி).xvi, 167 பக்கம், விலை: ரூபா 400., அளவு:

Bezpłatne Gry hazardowe Bądź W Kapitał

Content Fenix Play Sieciowy Bezpłatnie Jakie Będą Przewagi Wraz z Otrzymywania pięćdziesiąt Gratisowych Spinów Bez Depozytu? Internetowe Automaty W interpretacji owego tekstu ogół gracz będzie