இ.திருமாறக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: தேர்த் திருப்பணிச் சபை, கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பருத்தித்துறை: சிவா ஓப்செட் பிரின்டர்ஸ், வியாபாரிமூலை). xvviiiஇ 33 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ. மாறன் ஐயா என்றழைக்கப்படும் சைவப்புலவர் இ.திருமாறக் குருக்கள் அவர்களின் மலராசிரியர் உரையுடன் தொடங்கும் இச்சிறப்புமலரில், ஆசியுரைகள், வாழ்த்துரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, வினைதீர்க்க வந்த பருத்தித்துறை கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் வரலாறு (ப.கோபாலகிருஷ்ணன்), விநாயக வழிபாடு, மஹோற்சவ தத்துவம், இரதோற்சவம், தேர்களின் அமைப்பும் தேரோட்டத் தத்துவமும் (ஜெயலட்சுமி ராஜநாயகம்), அன்பின் வழியது உயர்வு (மாறன் ஐயா), நன்றியுரை ஆகிய விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 035834).