14160 புதுக்கோயிலான் பெருங்கருணை மகா கும்பாபிஷேகம் சிறப்பு வெளியீடு.

எம்.எஸ்.ஸ்ரீதயாளன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்), காங்கேசன்துறை வீதி, கொக்குவில், 1வது பதிப்பு, மே 2014. (கொக்குவில்: சோதிடப்பிரகாச யந்திரசாலை). (8), 142 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×18 சமீ. கொக்குவில் ஸ்ரீ கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஜீர்னோர்தாரன நவகுண்ட ப~ மஹா பெருஞ்சாந்திப் பெருவிழா தினத்தன்று புது நிர்மாணம் பெற்ற கோவிலுட் பிரவேசிக்கும் புனித நாள் நினைவாக ஆலயத்தினால் 05.05.2014 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு வெளியீடு இது. அருளாசி, வாழ்த்துச் செய்திகளுடன் கூடிய இம்மலரில், இன்றைய பெருஞ்சாந்தி விழா, நால்வர் திருமுறைகளில் குமரன் முருகன் துதி, ஆலய வரலாறு-ஒரு நோக்கு, கிருபாகரர் மீது பாடப்பெற்ற பனுவல்களும் பாடல்களும், புதுக்கோயிலான் பேரில் எழுதப்பட்ட திருப்பள்ளியெழுச்சி, ச.சபாரத்தின முதலியார் பாடிய ஆசிரிய விருத்தம், சுப்பிரமணிய சுவாமி கோவில் மான்மியம், கொக்கூர்க் குமர கிருபாகரரூஞ்சல் (மு.சி.), பிரார்த்தனை (தா.மஹாதேவக் குருக்கள்), கும்பாபிஷேக மகிமை, ஆலயத்தில் ஆசாரம் (இ.கலைவாணி), கோபுர தரிசனம் (க.கோபாலகிருஷ்ண ஐயர்), முருக வழிபாடு (பவானி முகுந்தன்), திருவடிகளில் (கனகசபாபதி நாகேஸ்வரன்), நாதாந்தம் (ஞானி சிவசுப்பிரமணியம்), நந்தி (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), கோவில்கள் பேணி வளர்த்த கலை, கருணைபெற பஜனைவழி கலை, கவிதைகள்-அருட்பாடல்கள்-பஜனைப்பாடல்கள், வேண்டும் புதுக்கோயிலானுக்கு ஒரு புதிய இராஜகோபுரம், புதுக்கோயிலடியார் தனிப் பெருமைகள், கொக்குவில் அமைவும் வழிபாடுகளும், ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 055071).

ஏனைய பதிவுகள்