மலர்க்குழு. கண்டாவளை: புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில், புளியம்பொக்கணை, 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்). (110) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. இச்சிறப்பு மலரில் வாழ்த்துக்கள், ஆசியுரைகளையடுத்து, மலரைப் பற்றி (சி.சு.சின்னத்தம்பி), புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோயில் சரித்திரச் சுருக்கம் (சி.சு.சின்னத்தம்பி), காத்திடும் தெய்வம்-கவிதை (கவிமணி வே. செல்வநாயகம்), அற்புதம் நிகழ்த்திய நாகதம்பிரான்-களவைக் காட்டிக் கொடுத்த நாகதம்பிரான் (சு.குமாரமூர்த்தி), அருள்மழை பொழி நாகதம்பிரானே- கவிதை (பச்சிலைப் பள்ளியூரான்), திருநீறு (கே.கணபதிப்பிள்ளை ஆசிரியர்), புளியம்பொக்கணையில் புயங்க அருட்பிரவாகம் (பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை), அமரர் விநாயகமூர்த்தி நவமணி (க.வே. அருணாசலம் உடையார்), அமரர் டாக்டர் மூர்த்தி-செய்யுள் (பொ.வேலாயுதபிள்ளை), புளியம்பொக்கணை நாகதம்பிரான் வரலாற்றுச் செய்யுள் (செல்வி இரத்தினம் இந்திரவதனி), ஸ்ரீ நாகதம்பிரான் கும்மி (சி.நளாயினி), நாவலரின் நாவன்மை (ஆர்.ரி.சுப்பிரமணியம்), பெருமானுடைய அற்புதங்கள்-தன் அடியாரைத் தண்டித்து இரட்சிக்கும் பான்மை (செல்வி பரமேஸ்வரி கனகசபை), அறிவியலும் அரும் சைவமும் (புலோப்பிள்ளையூர் ம.குமாரவேல்), வகுத்தான் வகுத்த வழி (கதைக் களஞ்சியம் இ.த.சுப்பிரமணியம்), தேவாலயத்தின் பெயரில் அமைந்த வித்தியாலயம் (வே.மயில்வாகனம்), புளியம்பொக்கணை நாகதம்பிரான் தாள்கள் போற்றிசெய்யுள் (சைவப்புலவர் அ.கி.ஏரம்பமூர்த்தி), நாகதம்பிரான் ஆண்டுற்சவப் பணியிலே….. (நா.வீரகத்திப்பிள்ளை), ஸ்ரீ புளியம்பொக்கணை நாகதம்பிரான் சுவாமி போற்றித் திருப்பதிகம்-செய்யுள் (செ.சிவப்பிரகாசம்), எங்கே? புளியம்பொக்கணையில்-கவிதை (மு.ஏ.சுப்பிரமணியம், மு.மகேசுவரன்), மணிக்கூட்டுக் கோபுர நிதி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் நமக்கோர் அன்பர் (நா.கணபதிப்பிள்ளை) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39849).