மலர்க்குழு. கொழும்பு: ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில், ஸ்ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1993. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). (2), 112 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×19 சமீ. 26.3.1993 அன்று இடம்பெற்ற மகாகும்பாபிஷேகத்தின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். இம்மலர் சமயப் பிரமுகர்களின் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் அருவமான கதிர்காமக் கந்தன் உருவமான கதிர்வேலாய்க் காட்சி தருகிறான் தலைநகரிலே (வசந்தா வைத்தியநாதன்), ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி குட முழுக்குக் காணலாம் வாரீரே- பாமாலை (சிவமயச் செல்வி விசாலாட்சி), மண்ணவரும் விண்ணவரும் மகிழ்ந்த மகா கும்பாபிஷேகம் (தி.செந்தில்வேள்), வாழ்க சீர் அடியார் எல்லாம் (சி.கு.செல்லையா), உலகம் உய்ய உதித்த திரு முருகன் (நா.க.மயில்வாகனம்), உலகம் போற்ற உயர்வளித்து உவப்பவன் உமைபாலன் (அ.கு.வீரசுப்பிரமணியம்), அண்ட சராசரங்கம் அனைத்தையும் காக்கும் கதிர்வேல் (கா.நமசிவாயம்), என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே (மல்லிகாதேவி சரவணபவன்), பக்தர் மறந்தாலும் பக்தரை மறவாதவன்: கதிர் வேலாயுதனின் கருணாகடாட்சம் (திரவியம் சபாரத்தினம்), கருங்கற்களையும் இரத்தினக் கற்களையும் ஒன்றாகவே கண்ட காட்சி திருப்புகலூரும் இரத்தினபுரியும் (நா.சு.தெய்வேந்திரன்), பக்தருடன் உறவாடத் துடிப்பவன் முருகன் (வீரபாகு ஐயர்), கதிரமலைக் காட்டில் கந்தன் கூட வந்து வழிகாட்டி மறைந்த கதை (மா. குமாரசுவாமி), கொழும்பு ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி திருப்பாடல் உயர் பணி நீடு வாழி-பாமாலை (மா.குமாரசுவாமி), செக்கடித் திருமுருகன் வான்புகழ வாழவைப்பான்-பாமாலை (சந்தனா நல்லலிங்கம்), கதிர்வேல் முருகா-பாமாலை (சுவாமி சுத்தானந்த பாரதியார்), கதிர்வேற் கந்தன் பவனிக் காட்சி- பாமாலை (பரமஹம்ஸதாசன்), கண்ணொளி பெற்றுப் பாடியவை- பாமாலை (சி.கார்த்திகேசுசேந்தன்), ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கீர்த்தனைகள்- பாமாலை (என்.வீரமணி), ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திரு ஊஞ்சல் -பாமாலை (என் வீரமணி), பழம்பெரும் புனித காலி மாநகர் மீனாட்சி சுந்தரேஸ்வரரை அநுமன் தரிசித்த புண்ணியபூமி (தி.செந்தில்வேள்), மண்டலம் ஆளும் மன்னவனுக்கு ஓர் மடல்: மண்டலம் ஆள் மன்னவா, தேவரைச் சிறை மீட்ட செல்வக்குமரனை சிறை எடுப்பதா (தி.செந்தில்வேள்), கடலில் வந்த கருணைமா கடலே நூதனச் சிறையினை உடைத்து நீ வருகவே- அந்தாதி (விசாலாட்சி), கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் (சில பாடல்கள்), அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி, ஆகிய ஆக்கங்களையும் கொண்டுள்ளது. நூலின் இறுதியில் ஆலய அர்ச்சகர்கள், சிறப்பு நிகழ்வுகள் ஆகியவற்றின் புகைப்பட ஆவணத் தொகுப்பும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14093).
Zum besten geben Sie Dinosaurier Reels 81 Inoffizieller mitarbeiter Demonstration Mode Zu 100percent Gratis
Content Oct Dino Reels 81 Slot Review 2024 Free Play Demo Bezeichnung je die eine auskunft inoffizieller mitarbeiter email-liebesakt – Beetle Frenzy Slot Online Casino