14167 மத்திய மாகாண இந்து மாமன்ற இந்து கலாச்சார நிலையத் திறப்பு பவிழா சிறப்பு மலர் 12.06.1983.

செ.நடராஜா, தி.சிவசுப்பிரமணியம் (இணை ஆசிரியர்கள்). கண்டி: இந்து கலாச்சார நிலையம், மத்திய மாகாண இந்து மாமன்றம், பேராதனை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1983. (கண்டி: நந்தன் அச்சகம், இல. 8, காசில் ஹில் வீதி). (6), 196 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ. 12.06.1983 அன்று கண்டியில் மத்திய மாகாண இந்து மாமன்றம், கண்டியில் இந்து கலாச்சார நிலையத்தினைத் திறந்து வைத்தபொழுது, வெளியிட்டுவைத்த சிறப்பு மலர். ஆசியுரைகள், பிரமுகர்கள், சகோதர சங்கங்கள் ஆகியவற்றின் வாழ்த்துரைகள், புகைப்பட வரலாற்று ஆவணப்பதிவுகள் ஆகியவற்றுடன், இம்மலரில், Ramalingam Swamigal ( A.C.Vadivel), மாமன்றத்தின் மணி மண்டபம்- கவிதை (உடப்பூரான்), மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் முக்கிய நிகழ்வுகள் (A.C.வடிவேல்), இந்து கலாச்சார நிலையத்திற்கான தளம் வெட்டும் வைபவம், மாமன்றத்தின் முதலாவது யாத்திரை, Highlights of the Central Province Hindu Association (A.C.Vedivel), கண்டி இந்து வாலிபர் சங்க அங்குரார்ப்பணம் (செ. நடராஜா), மத்திய மாகாண இந்து மாமன்ற பொதுச் செயலாளரின் அறிக்கை (க.செல்லமுத்து), தாய்ச் சங்க அடிச்சுவடுகளில் சேய்ச் சங்கம் (பொ.இராஜநாதன்), The Central Province Hindu Association (V.Sivasubramaniam), கசிந்துருகும் அடியவர் துயர் துடைக்கும் கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகிமையும் பெருமையும் (க.ப.சிவம்), தேர்த் திருவிழா (தி.சிவசுப்ரமணியம்), The “Ther” Festival in Kandy (T.Sivasubramaniam), கலாச்சார மண்டபமும் – மலையக இந்து மகளிரும் (திருமதி லலிதா நடராஜா), கண்டியில் இந்து கலாச்சார நிலையம் (நா.முத்தையா), மன்றத்தின் சிவராத்திரி விழாவும் திருமுறை மகாநாடும் (க.கா.மதியாபரணம்), இந்து கலாச்சார நிலைய கட்டட நிதி நன்கொடையாளர்களும் தொகைகளும், உள்ளத்தில் உள்ளான்-கவிதை (கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39873).

ஏனைய பதிவுகள்

Gaming En compagnie de Casino

Content Majestic Slots Une telle Score 2020 Les Remarquables Salle de jeu Un peu La propreté En compagnie de Croupier En direct Sur les Site