14175 ஸ்ரீ நகுலாம்பிகை (கீரிமலை) அருட்ஜோதி மலர், 1969.

து.சுந்தரமூர்த்தி ஐயர் (பதிப்பாசிரியர்). கீரிமலை: பிரமஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள், நகுலேஸ்வர ஆதீன வெளியீடு, 1வது பதிப்பு, 1969. (சுன்னாகம்: முத்தையா சபாரத்தினம், திருமகள் அழுத்தகம்). (2), 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற சகஸ்ர ஜோதிர் மண்டல சங்காபிஷேக வைபவத்தின்போது வெளியிடப்பட்ட சிறப்புமலர். வைதிகமும் ஆகமமும் இணைந்த வழிபாட்டு முறையில் இந்த அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன. தேவியை தீப ஜோதிகளில் ஆவாகித்து, ஜோதியிலிருந்து சங்கு தீர்த்தத்தில் ஒடுக்கிப் பின் சங்கு தீர்த்தத்தினால் அம்பாளை அபிஷேகிப்பதே இதில் முக்கிய அம்சமாகின்றது. அதன் காரணமாக இம்மலரும் அருட்ஜோதி மலராக வெளியிடப்பட்டுள்ளது. முன்னுரை (து.சுந்தரமூர்த்தி ஐயர்),நன்றியுரை (நகுலேஸ்வர ஆதீனகர்த்தா), ஸ்ரீ நகுலாம்பிகாதேவி தோத்திரம் (அருட்கவி சீ.விநாசித்தம்பி), ஆசியுரை (ச.குமாரசுவாமிக் குருக்கள்), கீரிமலை நகுலேஸ்வர ஆலய வரலாறு (ஆ.சிவநேசச்செல்வன்), சோதி (வி.சங்கரப்பிள்ளை), வீர இலக்குமி (பண்டிதர் செ.சிவப்பிரகாசம்), விஜயலட்சுமி (பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி), திருமகளின் திருவருள் அல்லது லக்ஷ்மி கடாக்ஷம் (கு.பாலசுந்தரக் குருக்கள்) ஆகிய ஆக்கங்களை இம்மலர் உள்ளடக்குகின்றது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் னு 1425).

ஏனைய பதிவுகள்

14129 சாவகச்சேரி அருள்மிகு வாரிவன ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் ; 2008.

மலர்க் குழு. சாவகச்சேரி: திருப்பணியாளர் வெளியீடு, அருள்மிகு வாரிவன ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008 (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).228 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14166 மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் -2003.

துரை. மனோகரன் (மலராசிரியர்). கண்டி: மத்திய மாகாணக் கல்வி இந்து கலாச்சார அமைச்சு, 1வது பதிப்பு, 2003. (கண்டி: கிராப்பிக் லாண்ட்). x, (2), 85 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18