14179 அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கீர்த்தனங்களும் தோத்திரப் பாமாலையும்.

தொகுப்பாளர் விபரமில்லை. அளவெட்டி: கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம், 4வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 1915, 2வது பதிப்பு, 1948, 3வது பதிப்பு, 1975. (கொழும்பு 2: கிரபிக் ஆட் பிரின்ட், 57, வெலோன்ஸ் பசேஜ்). (6), 115 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: அன்பளிப்பு, அளவு: 21×15 சமீ. இந்நூலின் முதலிரு பதிப்புகளும் கீர்த்தனைகளை மாத்திரம் கொண்டவையாக வெளிவந்திருந்தன. 1975இன் பின் வெளியிடப்பெற்ற மூன்றாவது நான்காவது பதிப்புகள் தோத்திரப் பாடல்களையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளன. கீர்த்தனங்களில் விநாயகர் அகவல், விநாயகர் கவசம், விநாயகர் ஜெபம், முருகன் ஜெபம், கந்தர் கவசம், கந்தர் சஷ்டி கவசம், நாமாவளி, சம்பந்தர் தேவாரம், திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம், அப்பர் தேவாரம், சுந்தரர் தேவாரம், மாணிக்கவாசகர் திருவாசகம், சிவபுராணம், திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, திருப்பொற்சுண்ணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமூலர் திருமந்திரம், பெரிய புராணம், திருப்புகழ், முருகன் பெயரில் கதிர்காமம் இராமலிங்க சுவாமிகளபாடல்கள் என்பவையும் தோத்திரங்கள் என்ற பிரிவில் பட்டினத்தடிகள் பாடல், தாயுமானவர் பாடல், சுத்தானந்தர் பாடல், சரஸ்வதி தோத்திரம், சகலகலாவல்லி மாலை, திவ்விய பிரபந்தம், திருமுறையோதல், வாழ்த்து ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 40413).

ஏனைய பதிவுகள்

14236 லீலா வினோதன் முருகன்.

பாமதி மயூரநாதன். யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). ஒஎi, 60 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா