பதியூரான் ச.ஜெயந்தன். ஆரையம்பதி: சந்திரசேகரம் ஜெயந்தன், இராஜதுரைக் கிராமம், 1வது பதிப்பு, 2009. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.மட்டக்களப்பின் மண்முனைப்பற்றின் பழம்பதியான ஆரையம்பதியில் பிறந்தவர் ஜெயந்தன். கவிவடிவில் அமைந்துள்ள இந்நூல், ஆரையம்பதி மண்ணின் பெருமையையும் அதில் அமைந்துள்ள கோவில்கள் பற்றிய பெருமைகளையும் இனிய தமிழ்க் கவிதைகளாகவே வழங்குகின்றது. தமிழ் மொழியும் ஆரையம்பதியும், ஆரையூர்க் கந்தன், அருள்தரும் கண்ணகி அம்மன், விக்கினங்கள் தீர்க்கும் விநாயகர், கிழக்கு பக்க சிவபெருமான், பௌர்ணமித் தாயாய் காளிஅம்பாள், பாங்குடனே பரமநயினார், பலமூர்த்தமாய் வைரவர், மகமாயி மாரியம்மா, பள்ளயத்துப் பேச்சியம்மன், அவதார புருஷராய் நரசிங்கர், வீரத்தின் சிகரம் ஆஞ்சநேயன், காத்தருளும் நாகதம்பிரான், குழல் ஊதும் கண்ணன், அழகு தரும் மதுரைவீரன், குடிமரபும் திருவிழாக்களும், கூத்துக்கலையும் ஆரையம்பதியும், ஆரையம்பதியும் ஆயுர்வேத வைத்தியமும், ஆரையம்பதியும் திருமந்திரமும், பெரும்பதியாய் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர், சமாதானம் வேண்டி இறைவனோடு ஆகிய 21 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4308).