தெல்லிப்பழை: அருள் ஒளி (மாத சஞ்சிகை), ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, நவம்பர் 2005. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (12), 132 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ. தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் மாதாந்த ஆன்மீக சஞ்சிகையாக வெளியிடப்பட்டுவந்த ‘அருள் ஒளி” இதழ்களில் புலவர் ஸ்ரீவிசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அவர்கள் ‘கந்தபுராண அமுதம்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதிவந்தார். அவற்றை ஒன்றுதிரட்டி நூலாக மேற்படி தேவஸ்தானத்தினர் வெளியிட்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37604).