த.குமாரசுவாமிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: த.குமாரசுவாமிப்பிள்ளை, ஆசிரியர், ஸ்ரீ இராமநாத வித்தியாலயம், 1வது பதிப்பு, 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xii, 131 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. கந்தபுராணம் 10345 செய்யுள்களைக் கொண்டது. பல்வேறு உபகதைகளைக் கொண்டதால் விரிந்து செல்லுவது. இப்புராணக் கதைகளை இளஞ்சிறார்களும் படிக்கும் வண்ணம் சுருக்கி பல்வேறு படலக் கதைகளை ஒவ்வொரு தலையங்கங்களில் அடக்கி ஐம்பது பாடங்களாக இந்நுலை ஆசிரியர் எழுதியுள்ளார். திருக்கைலாசம், உமையம்மை மலைமகளானது, மேருமலையின் நிகழ்ச்சி, காமதகனம், மோனம் நீங்கியது, திருமணம், முருகன் திருவவதாரம், முருகன் திருவிளையாட்டு, பிரமனைச் சிறையிட்டது, பிரமனைச் சிறை நீக்கியது, விடைபெற்றுப் போருக்குப் புறப்படல், தாரகன் வதை, அசுரேந்திரன் மகேந்திரம் சென்றது, குமாரபுரி, மாயை வரலாறு, மார்க்கண்டேயர், மாயை உபதேசம், அசுரர் யாகஞ்செய்து வரம் பெற்றது, சுக்கிரன் உபதேசம், திக்கு விஜயம், பட்டாபிஷேகம், அரசு செய்தது, புதல்வரைப் பெறுதல், இந்திரன் மறைந்திருந்தது, விந்தமலை, வில்வலன் வாதாவி வதை, காவிரி நீங்கியது, திருக்குற்றாலம், தேவர் புலம்பல், மகாசாத்தா, அசமுகியும் அயிராணியும், சூரன் தண்டஞ்செய்தல், வீரவாகு தேவர் தூதுசெல்லல், சூரன் அமைச்சியல், போர் தொடங்குதல், சூரபதுமன் வதை, தெய்வயானை அம்மை திருமணம், விண்குடியேற்றியது, தக்கன் தவம், தக்கன் மகப்பெற்றது, உமை தக்கன் மகளானது, பிரமதேவன் யாகஞ்செய்தது, ததீசி முனிவர், ததீசி உத்தரம், கயமுகன் தோற்றம், தக்கன் யாகம், யாக சங்காரம், அடி முடி தேடியது, கந்த விரதம், வள்ளியம்மை திருமணம் ஆகிய 50 பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21749).
Best Real money Gambling enterprise Apps 2025: Best Mobile Casinos online
Posts Just how many free revolves can you get by cellular verification? All of our Info: How to use an educated no deposit Added bonus