14190 கந்தபுராணம்: முதலாவது உற்பத்திக் காண்டம்.

கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), பிரம்மஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள், தும்பைநகர், பருத்தித்துறை, 1வது பதிப்பு, 1907. (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை). 746 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. கந்தபுராணம்: முதலாவது உற்பத்திக் காண்டம். கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), பிரம்மஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: மறவன்புலவு மு.கணபதிப்பிள்ளை, காந்தளகம், 213, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, தை 1984, 1வது பதிப்பு, 1907. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி).(20), 802 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 25×18.5 சமீ. இந்நூல் கடவுள் வணக்கம், உபோற்காதம், சிவபுராண படனவிதி, கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் சரித்திரச் சுருக்கம், புராணபடன விதி (பாயிரம், கடவுள் வாழ்த்து, அவையடக்கம், ஆற்றுப்படலம், திருநாட்டுப் படலம், திருநகரப் படலம், பாயிரப் படலம்), ஆகிய ஆரம்பப் பக்கங்களைத் தொடர்ந்து, திருக்கைலாசப் படலம், பார்பதிப் படலம், மேருப் படலம், காமதகனப் படலம், மோனநீங்கு படலம், தவங்காண் படலம், மணம்பேசு படலம், வரைபுனை படலம், கணங்கள்செல் படலம், திருக்கல்யாணப் படலம், திருவவதாரப் படலம், துணைவர் வரு படலம், சரவணைப் படலம், திருவிளையாட்டுப் படலம், தகரேறு படலம், அயனை சிறைபுரி படலம், அயனைச் சிறைநீக்கு படலம், விடைபெறு படலம், படையெழு படலம், தாரகன்வதைப் படலம், தேவகிரிப் படலம், அசுரேந்திரன் மகேந்திரஞ்செல் படலம், வழிநடைப் படலம், குமாரபுரிப் படலம், சுரம்புகு படலம், திருச்செந்திப் படலம், ஆகிய அத்தியாயங்களில் கந்தபுராணத்தின் உற்பத்திக் காண்டம் விரிந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9122).

ஏனைய பதிவுகள்

Gratis Klöver Vid Inskrivning

Content Prank Casino: casino Casinoluck kr100 gratissnurr Spelutbud Hos Casinon Inte med Svensk person Tillstånd Ultimat Casino Kungen Inter 2024 Hur Karl Betalar Villig Online