14198 சைவசமயத் திருமுறைப் பாராயணத்திரட்டு.

மகாதேவ ஆச்சிரமம். கொழும்பு 12: தாளையான் அச்சகத்தினர், 115 மெசெஞ்சர் வீதி, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு 12: தாளையான் அச்சகத்தினர், 115 மெசெஞ்சர் வீதி). v, (4), 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீமகாதேவ ஆச்சிரமம் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு தாளையான் அச்சகத்தினரால் தொகுத்துப் பதிப்பிக்கப்பெற்று இலவசமாக அன்பர்களுக்கு வழங்கப்பெற்ற பிரசுரம். சற்குரு வணக்கம், அநுபூதி பெற வழி, முகவுரை, அணிந்துரை ஆகியவற்றுடன், திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம், திருமாளிகைத் தேவர் அருளிய திருவிசைப்பா, சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, தாயுமான சுவாமிகள் பாடல், திருமந்திரம், பட்டினத்தடிகள் பாடல், பரஞானத்தின் பயன், ஒளவை குறள் ஆகிய 19 திருமுறைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33205).

ஏனைய பதிவுகள்

12702 – அரங்கியல் நூல்: க.பொ.த.உயர்தரம் (நாடகமும் அரங்கியலும்).

வனிதா சுரேஸ்.களுவாஞ்சிக்குடி: திருமதி வனிதா சுரேஸ், வாகரையார் வீதி, களதாவளை-1,1வது பதிப்பு, தை 2006. (மட்டக்களப்பு: நியூ கீன் அச்சகம், 73, முனை வீதி). v, 62 பக்கம், விலை: ரூபா 125.00, அளவு:

14977 கங்கைவேலி.

சி.நந்தகுமார். திருக்கோணமலை: சிவசுப்பிரமணியம் நந்தகுமார், நகராட்சிமன்ற உறுப்பினர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1999. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). (2), 29 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100.,

Benefits of Online Dating

Online dating has transformed the way people find love and build relationships. In the digital age, the benefits of online dating are numerous and can

14351 உசாத்துணையிடல் பாணிகள்: APA உசாத்துணையிடலுக்கான வழிகாட்டல் குறிப்புளுடன்.

ப.மு.நவாஸ்தீன், M.U.M.ஸபீர். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 20.5×15 சமீ.,