14202 தமிழ் வேதப்பாமாலை.

அருள் சுவாமிநாதன் (தொகுப்பாசிரியர்). அச்சுவேலி: இடைக்காடு இந்துநெறிக் கழகம், இடைக்காடு, 1வது பதிப்பு, மார்ச் 1995. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி வீதி, வெள்ளவத்தை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. திருஞான சம்பந்த நாயனார் தேவாரம், திருநாவுக்கரசு நாயனார் தேவாரம், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பதினோராந் திருமுறை, பன்னிரண்டாந் திருமுறை, திருப்புகழ், வாழ்த்து, விநாயகரகவல்-ஒளவையார், சிவபுராணம்-மாணிக்கவாசக சுவாமிகள், ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஸ்தோத்திரம், துக்க நிவாரண அஷ்டகம், கந்தசஷ்டி கவசம்-பாலன் தேவராயர், பெருமாள் திருமொழி, சரஸ்வதி தோத்திரம், இலக்குமி தோத்திரம், அபிராமி அந்தாதி ஆகிய பக்தி இலக்கியங்களின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் பிரார்த்தனைகளில் பாடுவதற்கேற்ப பிரசுரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17274).

ஏனைய பதிவுகள்

14097 முருகன் கதிர்காமம்.

மு.கணபதிப்பிள்ளை. சென்னை 17: அருள் நிலையம், 12, உஸ்மான் ரோடு, 1வது பதிப்பு, 1967. (சென்னை 17: சௌந்தரா பிரின்டர்ஸ்). 100 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ. இந்நூலில் தென்புலோலியூர்

14250 சமூகக் கல்விப்பாடத்துக்கான தேசப்படப் பயிற்சி 10-11.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 14ஆவது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1986. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 28 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,