சி.இ.சதாசிவம்பிள்ளை. புங்குடுதீவு 12: சி.ஆறுமுகம், பதிப்பாசிரியர், தமிழகம், 2வது (மீள்)பதிப்பு, 2015, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 6: குளோபல் கிறபிக்ஸ், கொழும்புத் தமிழ்ச்சங்க ஒழுங்கை, வெள்ளவத்தை). 86 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 17.5×12.5 சமீ. அணிந்துரை (சி.கணபதிப்பிள்ளை), பதிப்புரை (சி.ஆறுமுகம்), மீள்பதிப்புரை (சி.ஆறுமுகம்), முகவுரை (க.கைலாசபதி), நூன்முகம் (சி.இ.சதாசிவம்பிள்ளை), ஆகியவற்றைத் தொடர்ந்து இப்பிள்ளைத்தமிழ்ப் பாமாலை இடம்பெற்றுள்ளது. காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலாட்டுப் பருவம், சப்பாணிப் பருவம்,முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊசற் பருவம் ஆகிய பருவங்களின் கீழ் பாடப்பெற்றுள்ளன. நூலின் இறுதியில் அருஞ்சொற் பொருள் விளக்கம் காணப்படுகின்றது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65114).