14209 திருமுறைத் தோத்திரப் பாடல்கள்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடி, இணுவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 104 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 20×14 சமீ. இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய சைவச் சிறார்களும் திருமுறைகளைக் கிரமப்படி பிழையறக் கற்கவேண்டுமென்ற நல்நோக்குடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வருடத்தில் ஒருமுறை நடைபெறும் பிள்ளையார் கதை, திருவெம்பாவை, நவராத்திரி, கந்தசஷ்டி விழா காலங்களில் படிப்பதற்காகவும் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறைகளில் தேவாரங்கள், திருவாசகம் ஆகியவை மிக ஆழமான கருத்துடையவை. இவற்றுடன் பிள்ளையார் கதை, அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், போன்றவை எந்த நிகழ்வுக்கும் பயன்படக் கூடியவகையில் தொகுக்கப்பட்டுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38910).

ஏனைய பதிவுகள்

14090 உலக சைவப் பேரவையின் யாப்பு.

உலக சைவப் பேரவை. கொழும்பு: உலக சைவப் பேரவை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 44 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ. 1998

12107 – திருக்கோணமலை இராமகிருஷ்ண சங்க ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர்.

சிவயோகநாதன் பிரேம் ஆனந்த் (இதழாசிரியர்). திருக்கோணமலை: இந்து மாணவர் மன்றம், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (கொழும்பு 14: போகய்ன்வில்லா (Bougainvilla) பிரின்டர்ஸ்). (20), 46 பக்கம், விலை: