மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடி, இணுவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 104 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 20×14 சமீ. இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய சைவச் சிறார்களும் திருமுறைகளைக் கிரமப்படி பிழையறக் கற்கவேண்டுமென்ற நல்நோக்குடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வருடத்தில் ஒருமுறை நடைபெறும் பிள்ளையார் கதை, திருவெம்பாவை, நவராத்திரி, கந்தசஷ்டி விழா காலங்களில் படிப்பதற்காகவும் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறைகளில் தேவாரங்கள், திருவாசகம் ஆகியவை மிக ஆழமான கருத்துடையவை. இவற்றுடன் பிள்ளையார் கதை, அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், போன்றவை எந்த நிகழ்வுக்கும் பயன்படக் கூடியவகையில் தொகுக்கப்பட்டுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38910).