14211 திருவாசகத் தேன்துளிகள் ஐந்து.

ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம். கொழும்பு 6: சைவ சித்தாந்த திருச்சபை, இல. 5, மூர் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 1992, 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 25 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 18×14 சமீ. ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம், ஆண்டுதோறும் நடாத்தும் திருவாசக முற்றோதல் நிகழ்வின் 13ஆவது ஆண்டு நிகழ்ச்சியின்போது, 31.12.1989 அன்று சைவ சித்தாந்த திருச்சபையின் கொழும்புக் கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிறு பிரசுரமாகும். இதில் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம் என்பனவும், தில்லையில் அருளிய திருப்பொற்சுண்ணம், யாத்திரைப் பத்து என்பனவும், திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவையுமாக ஐந்து திருவாசகப் பதிகங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 034528).

ஏனைய பதிவுகள்