14214 தெகிவளை நெடுமால் கோவை.

வ.சிவராசசிங்கம் (மூலம்), க.கணபதிப்பிள்ளை (உரையாசிரியர்). தெகிவளை: தெகிவளை நெடுமால் விஷ்ணு கோவில் ஆதீனம், 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 5: ஆர்.எஸ்.ரி. என்ரபிறைஸஸ், நாரஹென்பிட்டிய). ஒஎiiiஇ 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. பிள்ளைக்கவி வ.சிவராசசிங்கம் அவர்களின் தெகிவளை நெடுமால் கோவை என்ற இப்பிரபந்த இலக்கியத்திற்கு சிலேடைக் கவிரத்தினம் க. கணபதிப்பிள்ளை உரை எழுதியுள்ளார். தெகிவளை நெடுமால் கோவிலின் தொன்மை பற்றிக் குறிப்பிடும்போது, இக்கோயிலின் தொன்மை 18ஆம் நூற்றாண்டுவரையில் எட்டுவதாகக் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கோயில் களுபோவில, நெடிமால ஆகிய இரு கிராமங்களுக்கான எல்லை வேலியாக நிற்கின்றது. அந்தக் காலத்தில் இது ஒன்றே கற்கோவில். தமிழில் கற்கோவில், பின்னர் களு(கறுப்பு) கோவில் என்றும், பின்னர் அதுவும் மருவி களுபோவில என்றும் ஆனதாகவும், நெடிமால என்ற கிராமப் பெயர் நெடுமால் என்ற பெயரின் மருவலாக இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41819).

ஏனைய பதிவுகள்

jogos de cassino online

Asino casino Promocje kasyn online PlanGames Jogos de cassino online In addition, we checked that the best PayPal casinos offered alternative payment methods. While all