14217 தோத்திரக் களஞ்சியம்.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 5: அமரர் வள்ளிநாயகி சிவசிதம்பரம் குடும்பத்தினர், 245, பொல்ஹேங்கொட வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 12: வக்மீ அச்சகம், 258ஃ3, டாம் வீதி). 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14.5×11 சமீ. கையடக்கப் பிரசுரமாக வெளிவந்துள்ள அந்தியேட்டி நினைவு வெளியீடு இதுவாகும். விநாயகர் துதி, விநாயகர் திருவகவல், சிவபுராணம், கந்தர் சஷ்டி கவசம், திருவெம்பாவை, சகலகலாவல்லி மாலை, பஞ்சபுராணம், திருப்பொற்சுண்ணம், கோளறு திருப்பதிகம், திருக்கோணேசுவரப் பதிகம், திருக்கேதீச்சரத் திருப்பதிகம், அபிராமி அந்தாதி, செய்யவேண்டியன, பட்டினத்தார் பாடல், நவக்கிரக தோத்திரம், வாழ்வில் கொள்ளவேண்டியவை, கீதாச்சாரம் ஆகிய 17 தலைப்புகளில் இப்பிரசுரம் தொகுக்கப்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34208).

ஏனைய பதிவுகள்

14760 காலங்கள் மாறும்.

கே.எஸ்.ஆனந்தன். (இயற்பெயர்: கார்த்திகேசு சச்சிதானந்தம்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 4: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). ii,