வெளியீட்டுக் குழு. மன்னார்: மகா சிவராத்திரி மட பரிபாலன சபை, திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, திருக்கேதீச்சரம், 1வது பதிப்பு, மார்ச் 2003. (மன்னார்: பிரான்சிஸ் அச்சகம்). (8), 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. திருக்கேதீச்சரச் சிவாலயத்தின் திருப்பணிகளுள் ஒன்றாக மகா சிவராத்திரி மடம் புனரமைக்கப்பட்ட வேளையில் 01.03.2003 அன்று நடைபெற்ற சிவராத்திரி விழாவின்போது வெளியிடப்பட்ட தோத்திரத் திரட்டு. இந்நூலில் சிவராத்திரியின் மகிமை, திருக்கேதீச்சர ஆலயமும் மாந்தைத் துறைமுகமும், திருக்கேதீச்சர மகா சிவராத்திரி மடம், ஆகிய வரலாற்றுக் கட்டுரைகளும், திருக்கேதீச்சரப் பதிகம், பஞ்சபுராண பாடல்கள், கோளறு பதிகம், சிவபுராணம், சகலகலாவல்லி மாலை, திருவெம்பாவை ஆகிய தோத்திரங்களின் திரட்டும் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28189).