மலர்க் குழு. சுன்னாகம்: ஜெயராம்ஸ் ஸ்தாபனம், 1வது பதிப்பு, ஜுன் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). x, 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ. இது தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைச் சேர்ந்தவரும் சுன்னாகம் ஜெயறாம்ஸ் ஸ்தாபனத்தின் உரிமையாளருமான அமரர் கதிர்காமர் நாகநாதர் அவர்களது பிரிவு குறித்த நினைவு மலர். இதில் நாயன்மார்களின் தேர்ந்த திருமுறைகள் தோத்திரத் திரட்டாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17567).
14822 அசையாத மலைத்தொடர்.
கமல் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).